Thursday, May 4, 2017

தொலைத்திட்ட நிம்மதியைத் தேடுகின்றேன்—மேலும் தொலைத்தயிடம் அறியாது வாடுகின்றேன்





தொலைத்திட்ட  நிம்மதியைத்  தேடுகின்றேன்—மேலும்
     தொலைத்தயிடம்  அறியாது வாடுகின்றேன்
கலைத்துவிட்ட தேனடையின் ஈக்கள்வந்தே- தேடித்
      கலைத்தவனை கொட்டிவிடும்  துயரம்தந்தே
நிலைத்துவிட  உள்ளத்தில் நொந்துபோனேன்-துளியும்
      நிம்மதியைக்  காணாது  ஏங்கலானேன்
அலைத்தடத்தில் கடலோர  மணலின்  வீடாய்-அந்தோ
       ஆயிற்றே என்செய்வேன் அணைத்தும்  வீணே!

புலவர்  சா  இராமாநுசம்

6 comments :

  1. இன்று பலரது நிலைப்பாடு இதுதான் ஐயா

    ReplyDelete
  2. இதுவும் கடந்து போகும் அய்யா :)

    ReplyDelete
  3. இதுவும் கடந்து போகும் ஐயா....

    ReplyDelete
  4. நானும் நிம்மதி இழந்துதான் தவிக்கிறேன் ஐயா, தமிழ்மணம் எங்கே போயிற்றென்று ஆறியாமல்!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  5. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    ஒவ்வொருவர் மனதிலும் இருப்பதை அப்படியே கூறிவிட்டீர்கள் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...