Monday, May 22, 2017

படிப்பவரும் குறைந்துவிட பலபேரைக் காணவில்லை!




நித்தம் ஒருகவிதை நிலையாக எழுதிவிட
சித்தம் இருந்தாலும் செயல்படுத்த இயலவில்லை!
முதுமை முன்வாட்ட முதுகுவலி பின்வாட்ட
பதுமை ஆகிவிட்டேன் பதிவெழுதா நிலைபட்டேன்!

மோனை எதுகையென முறையாக எழுதியவன்
சேனை இழந்தரசாய் செயலற்று போய்விட்டேன்!
தும்பிக்கை இழந்ததொரு யானையெனத் துயர்பட்டே
நம்பிக்கை போயிற்றாம் நல்லோரே ! மன்னிப்பீர்!

படிப்பவரும் குறைந்துவிட பலபேரைக் காணவில்லை
துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும் காணவில்லை!
உடலுக்கே சோதனைதான் உள்ளத்தில் வேதனைதான்
கடலுக்கே ஆலைபோல கவலையிலே மனமோயா!

புலவர்   சா  இராமாநுசம்

28 comments:

  1. இந்த நினைவாற்றலே போதும் ஐயா தொடரட்டும்

    ReplyDelete
  2. //படிப்பவரும் குறைந்துவிட பலபேரைக் காணவில்லை
    துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும் காணவில்லை!//

    இன்றைய உண்மையை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யூ 2 கோபு அண்ணன்???.. அப்போ நாங்க உங்களுக்குப் போடும் கொமெண்ட்ஸ் ஐ எல்லாம் உச்சிப்பிள்ளையார் கேணியில் தூக்கிப் போட்டிட்டீங்களோ?:)..

      அச்சச்சோ நெல்லைத்தமிழனின் போளி சாப்பிட்டுத்தான் எனக்கு என்னமோ ஆச்சுது.. மீ காசிக்குப் போறேன்ன்ன்ன்ன்:).. என்னைத் தேட வேண்டாம்ம்ம்ம்:)..

      Delete
  3. ஐயா கலக்கம் வேண்டாம் தங்களால் இயன்றதை எழுதுங்கள்

    வராதவர்களைப்பற்றி நினைக்காமல் வரவேண்டிய கவிதைகளைப்பற்றி நினையுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது இது.. இது பதில்.. ரொம்பத் தெளிவா இருக்கிறார்ர் கில்லர்ஜீ.

      மதிவதனி....உகண்டா மாப்பிள்ளைக்கே:).

      Delete
  4. #முதுமை முன்வாட்ட முதுகுவலி பின்வாட்ட#
    உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் அய்யா ,அதுதான் முக்கியம் !

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர் ஒரு பேச்சுக்கு எதுகை மோனையா எடுத்து விட்டதை எல்லோரும் சேர்ந்து பெட்லயே இருக்க வச்சிடுவீங்க போலிருக்கே:).. உங்கள் கொமெடியில் ரெண்டைச் சொல்லிச் சிரிக்க வைக்கக்கூடாதோ? சிரிச்சுக்கொண்டே எழுந்து ஓடித்திரிவார் எல்லோ... உடல் சோர்வுக்கு காரணம்.. உடலோ வயசோ அல்ல... மனம் தான்:(.

      Delete
  5. இந்த மாதிரி எண்ணங்கள் எனக்கும் உண்டு

    ReplyDelete
  6. //சேனை இழந்தரசாய் செயலற்று போய்விட்டேன்!
    தும்பிக்கை இழந்ததொரு யானையெனத் துயர்பட்டே//

    எழுத்தின் தரம் புரிந்த 10 பேர் படித்தாலும் போதும். எழுதும் கைகளில் வலிமை இருக்கும்வரை எழுதுங்கள்.

    ReplyDelete
  7. இன்றைய பதிவுலக நிலை இதுவே ஐயா.
    சமீபத்தில்தான் மீண்டும் எழுதத் தொடங்கினேன்.அதற்குள் உற்சாகம் சிறிது குறைந்து விட்டது
    பதிவு கிடக்கட்டும்.உடல் நலம் முக்கியம்

    ReplyDelete
  8. தாங்கள் சோர்வு நீங்கி அமைதியடைய வாழ்த்துகிறேன். சோர்வும் சலிப்புமே முதுமையின் சாபக்கேடுகள்.

    ReplyDelete
  9. பல வலைப்பதிவர்கள் முகநூலில் மூழ்குவது தவறில்லை... ஆனால்... ஆனால் பகிர்ந்து கொள்ளும் சில பதிவர்களின் தளத்திற்கு செல்லாமல் இருக்கும் வலைப்பதிவர்கள் மீது என்னவென்று சொல்வது....?

    பல பதிவர்கள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி...

    தொடர வேண்டும் ஐயா...

    https://yaathoramani.blogspot.in/2017/05/blog-post_76.html

    ReplyDelete
    Replies
    1. முகநூலில் இருந்தாலும் சில வருடங்களுக்கு முன் இருந்த வலைப்ப்பதிவின் மகிழ்ச்சியை தரவில்லைண்ணே

      Delete
    2. வலைதள பதிவில் ஒரு குடும்பதினர் போல உரிமையில் என்ன வேண்டுமானலும் கிண்டல் கேலி செய்யலாம் ஆனால் அது போல என்னால் பேஸ்புக்கில் செய்ய முடியவில்லை பேஸ்புக் பொது வெளி போலவும் வலைத்தளம் நாம் வசிக்கும் வீடு போலவும் இருக்கிறது..உங்களை எல்லாம் எவ்வளவு கலாய்த்து இருப்பேன் ஆனால் அதே உரிமையில் இன்று உங்களை பேஸ்புக்கில் கலாய்க்கமுடியவில்லை ராஜி...இப்போது முகம் அறியாத ஏஞ்சல் அதிரா போன்றவர்கள் வலைத்தளத்தில் கலாய்த்து கொண்டிருக்கிறேன்

      Delete
    3. ///இப்போது முகம் அறியாத ஏஞ்சல் அதிரா போன்றவர்கள் வலைத்தளத்தில் கலாய்த்து கொண்டிருக்கிறேன்///

      அஞ்சூஊஊஊஊஊஉ இந்தச் சம்பவம் எனக்குத் தெரியாமல் எப்போ நடந்துதூஊஊஊ?:).. சே..சே..சே.. வரவர எங்கயும் ஒரு பாதுகாப்பே இல்லாமல் இருக்கே சாமீஈஈஈஈ:) இனிக் கொஞ்சம் ஜாக்க்க்க்க்ர்த்தையாத்தான் இருக்கோணும்:).

      Delete
    4. நிம்மதி நிம்மதி எங்கள் சொயிஸ்ஸ்..
      இன்பமும் துன்பமும் எங்கள் சொயிஸ்ஸ்:)

      Delete
  10. இயன்றவரை அனைவர் பக்கமும் செல்ல வேண்டும் நானும் ..தொடர்கிறேன்
    உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. ஐயா நல்லாத்தான் இருக்கிறார்... உங்கட வாழைப்பூ ரசம் குடிச்சதிலிருந்துதான் கொஞ்சம் தலை சுத்துதாம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்:).. ஹையோ நேக்கு இன்று என்னமோ ஆச்சூஊஊஊஉ.. மீ எஸ்கேஎப்ப்ப்ப்ப்ப்:).

      Delete
  11. நானிருக்கேன்பா

    ReplyDelete
    Replies
    1. ஹலோஓஓ... இருந்தால் போதாது.. ஒழுங்கா இங்கு வந்து கொமெண்ட் போடோணும்:).. ஹையோ இப்ப நான் என்ன ஜொல்லிட்டேன்ன்ன்ன்ன் எதுக்கு இப்பூடிக் கலைக்கிறா கர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
  12. படிப்பவர்கள் குறையவில்லை கருத்து போடுபவர்களின் எண்ணிக்கைதான் குறைந்து போய்விட்டது அய்யா கருத்துகல் இடவில்லை என்றால் என்ன நீங்கள் நினைப்பதை சொல்லிக் கொண்டே இருங்கள் பேஸ்புக் கசந்து போகும் போது மீண்டும் வராதவர்கள் வருவார்கள்

    ReplyDelete
    Replies
    1. /// பேஸ்புக் கசந்து போகும் போது மீண்டும் வராதவர்கள் வருவார்கள்////
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கடல் வத்திப் பூனை குடல் வத்திச் செத்த கதையாவெல்லோ இருக்குது இது:).. இருப்பதை விட்டிட்டு பறப்பதுக்கு ஆசைப்படக்குடா கர்ர்:)... முதல்ல இங்கிருப்போருக்கு ஒழுங்கா கொமெண்ட்டும் போட்டு வோட்டும்.. ஆ.. இல்ல இல்ல வாய் மாறி வந்திட்டுது:)... கொமெண்ட்ஸ் போட்டுப் பராமரிச்சாலே போதும்.. எதுக்கு பேஸ் புக்கில் இருப்போரை எண்ணி வருந்துறீங்க.... 20 புளொக்கை ஃபலோ பண்ணிவதுக்கே மூச்சு முட்டுது.. ரொம்ப ஹப்பியா இருக்குது... இதை ஒழுங்கா மெயிண்டைன் பண்ணினாலே போதுமே...:)

      Delete
  13. கருத்துரைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துதான் போய்விட்டது ஐயா
    ஆனாலும் வலைப் பூவினைப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறையாமல்தான் இருக்கிறது ஐயா
    வலைப பூவில் இருந்த பலர் முக நூலுக்குச் செல்வதில் தவறில்லை, ஆனாலும் வலைப் பூவினை முற்றாய் புறக்கணித்துவிட்டு, முகநூலில் மட்டும் முகம் காட்டுவது வேதனைதான்
    இதுவும் கடந்து போகும் ஐயா
    உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள் ஐயா

    ReplyDelete
  14. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. நாங்கள் வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  15. வலைத்தளம் நம்மை அன்றாடம்
    புதுப்பித்துக் கொள்ளவும் உதவுவதால்
    எழுதுவது அவசியமாகிறது
    பிறர் வருகையும்,பின்னூட்டமும்
    கூடுதல் போனஸ் அவ்வளவே

    உடலுக்கு முக்கியத்துவம் தரவும்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  16. எல்லோரும் இங்கே இருக்கிறேன் எனச் சொல்றார்கள், ஆனா நான் மட்டும் நிற்கிறேன்:)....

    யாரும் வருவதில்லை என எண்ணாதீங்கோ... நேரம் கிடைக்கையில் எல்லா வீடுகளுக்கும் போய் ரீ குடிச்சு வாங்கோ, நாம் போகாமல் நெடுகவும் நம் வீட்டுக்கு வந்து ரீ குடிச்சுக்கொண்டிருக்க மாட்டினம் எல்லோ.. அதுக்குத்தான் சொல்றேன்ன்.. போனால் வருவார்கள்...

    ReplyDelete
  17. "படிப்பவரும் குறைந்துவிட பலபேரைக் காணவில்லை
    துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும் காணவில்லை!"
    இது இன்றைய நிலையின் அளவுகோல்!
    வலைப்பூக்கள் வாழும்...
    வாசிப்போர் குறைவதில்லையே!

    ReplyDelete
  18. இதுதான் இன்றைய பதிவுலக நிலை ஐயா முடியும் போதெல்லாம் படிக்கின்றேன் நட்புக்களின் வலையை. உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா!

    ReplyDelete