அன்னையர் தினம்!
சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?
உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?
புலவர் சா இராமாநுசம்
அன்னையர் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteகல்லறை போகும் வரையிலும் இருந்த கருவறையை மறக்க முடியாது தான் அய்யா :)
ReplyDeleteஅருமையான கவி அன்னையர் தின வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteபகவான் ஜி வரிகளை கடன்வாங்கி வழிமொழிகிறேன்.
ReplyDeleteஎன்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல வரிகள். அனைவருமே இதனை அனுபவிக்கமுடிகிறதா என்பது சிந்திக்கத்தக்கதே.
ReplyDeleteஇந்த சுட்டியில் உள்ளதைப் படித்துப்பாருங்களேன்
ReplyDeletehttp://gmbat1649.blogspot.com/2015/05/blog-post_10.html?