வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன்
வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே
தாங்காதே தாங்காதே மேன்மேலும் துயரம் –அதனால்
தணியாது எரியாதோ மக்கள்தம் வயிறும்
ஏங்காதே பின்னலே விலைவாசி ஏறின்- என்றே
எண்ணியே தெளிவாக ஆராய்ந்து தேறின்
தூங்காது விழிப்போடு போடுவாய் ஓட்டே- நன்றே
தேர்தலில் உன்னுடை உரிமையாம் சீட்டே
புலவர் சா இராமாநுசம்
அருமை ஐயா வோட்டார் கேட்டல் நன்றே
ReplyDeleteநன்றி!
Deleteகாசு கொடுக்கப்படும்போதும், வாங்கும்போதும் நியாயங்கள் மறந்து விடுகின்றன அல்லது மரத்து விடுகின்றன! தம +1
ReplyDeleteநன்றி!
Delete"வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன் வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே!" என்பதை உணர முயல்வோம்!
ReplyDeleteநன்றி!
Deleteகாசு தராத கட்சி ஒன்று ,உங்கள் கவிதையை அச்சிட்டு தொகுதியில் விநியோகித்தால் நல்லது :)
ReplyDeleteநன்றி!
Deleteஉண்மை ஐயா
ReplyDeleteநன்றி!
Deleteகாசுவாங்கினால் அவர்களுக்கே ஓட்டு போடும் நேர்மையாளர்கள் நம் மக்கள்
ReplyDeleteபோலியான நடைமுறைகள். அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.
ReplyDeleteகள்ளப் பணத்தை இப்படி பகிர்ந்து கொள்வதன் மூலம், நல்ல பணமாக மாற்றுகிறார்கள் என்று லயோல கல்லூரி பொருளாதார மேதைகள் ஒரு ஆய்வில் தெரிவித்தால் என்ன செய்வீர்கள்?
ReplyDeleteநீங்கள் சொல்வது அவர்கள் காதில் விழவேண்டுமே ஐயா.
ReplyDeleteபொறுப்பான கவிதை
ReplyDelete