உச்சநீதி மன்றம்வரை சென்றப் பின்பும்- எண்ணில்
உயிர்துறந்த உழவர்தமை மறைத்தல் துன்பம்
அச்மின்றி பொய்கூறிய தமிழக அரசே-இனியும்
ஆள்வதெனில் என்றென்றும் அழியா மாசே
பிச்சைதனை போடுவதாய் நடுவண் அரசும்-ஏதோ
பேருக்கு உதவியென தருவது பெரிசாம்
மெச்சவொரு ஆட்சிவரும் நாள்தான் என்றோ-உழவன்
மேதினியல் மேன்மைகெட அழிதல் நன்றோ!?
புலவர் சா இராமாநுசம்
உழவனைக் கிள்ளுக் கீரை என நினைக்கும் ஆட்சி உருப்படாது !
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteஅவலம். அன்றாட சமுதாய நிகழ்வுகளை இதுபோல் மரபுவடிவத்தில் நீங்கள் தருவது காலத்தின் ஆவணம்.
தங்கள் பணி சிறக்கட்டும்.
தம
நன்றி.
வேதனைதான் ஐயா.
ReplyDeleteபுலம்பல் சிறிது ஆறுதல் தரலாம்
ReplyDeleteவேதனை
ReplyDeleteசுழன்றும் ஏர் பின்னது உலகம் என்பதை மறந்து விட்டார்கள் போலும்.
ReplyDeleteஉழவர்கள் யார் என்பதே மறந்துவிட்டது. யார் அவர்கள்? என்ன வேலை செய்கிறார்கள்? எவ்வளவு சம்பளம்? (இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்கள் இப்படிக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள் எனபது உறுதி.)
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி
வேதனை ஐயா.
ReplyDelete