Tuesday, April 18, 2017

காணாது கண்டதுபோல் உரைக்க வேண்டாம் கல்நெஞ்சக் காரனாக இருக்க வேண்டாம்!



காணாது கண்டதுபோல் உரைக்க வேண்டாம்
கல்நெஞ்சக் காரனாக இருக்க வேண்டாம்
நாணாது பொய்சொல்லி திரிய வேண்டாம்
நயவஞ்ச காரரொடு தொடர்பே வேண்டாம்
வீணாக பொழுதெல்லாம் கழிக்க வேண்டாம்
வேலைவெட்டி இல்லாதார் நட்பே வேண்டாம்
பேணாது பொருள்தன்னை அழிக்க வேண்டாம்
பிறர்பொருளை கேட்காமல் தொடவே வேண்டாம்


புலவர் சா இராமாநுசம்

7 comments:

  1. நல்ல தொகுப்பு ஐயா

    ReplyDelete
  2. இவ்வாறு இருந்தாலே போதும் ஐயா... அனைத்தும் சிறப்பு...

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு புலவர் ஐயா.

    ReplyDelete
  4. "வேலைவெட்டி இல்லாதார் நட்பே வேண்டாம்" என்று எழுதினீர்களோ இல்லையோ, வேலையில் இருக்கும் சில பதிவர்கள் என்னுடைய நட்பை வெட்டிவிட்டார்கள் ஐயா!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  5. வீணாக பொழுதெல்லாம் கழிக்க வேண்டாம்
    வேலைவெட்டி இல்லாதார் நட்பே வேண்டாம்
    என்பது
    அருமையான எண்ணங்களே!

    ReplyDelete
  6. வேண்டாம் எட்டும் சிறப்பு அய்யா :)

    ReplyDelete