Sunday, April 16, 2017

மனிதா மனிதா ஏமனிதா-நாளை மரணம் வந்தே நெருங்குமுன்னே!



மனிதா மனிதா ஏமனிதா-நாளை
மரணம் வந்தே நெருங்குமுன்னே
புனிதா புனிதா என்றுலகு-நாளும்
போற்ற ஏதும் செய்தாயா
நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
நலிந்தோர் தமக்குத் தந்தாயா
இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
இணையில் இன்பம் எய்திடுவாய்


பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
தூய்மையை சற்றே குறைந்தாராய்
இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
  
புலவர்  சா  இராமாநுசம்

7 comments:

  1. சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
    செப்பிட வாழ்பவர் பெருந்தகையே

    உண்மை ஐயா
    உண்மை
    அருமை

    ReplyDelete
  2. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  3. #துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
    தூய்மையை சற்றே குறைந்தாராய்#
    சரியாக சொன்னீர்கள் அய்யா ,இன்று பல 'ஆனந்தா'க்கள் இப்படி இருக்கிறார்களே :)

    ReplyDelete
  4. சிறப்பாகச் சொன்னீர்கள் புலவர் ஐயா.

    ReplyDelete
  5. "புனிதா புனிதா என்றுலகு-நாளும்
    போற்ற ஏதும் செய்தாயா?"

    என்று கேட்கிறீர்கள். இதுவரை இல்லை ஐயா! இனிமேல் முயலுவேன். சரியா?

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  6. வணக்கம்.
    வாழ்வைப் பொருளுள்ளதாக்கும் அறவுரை! அறிவுரை.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  7. "பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
    பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
    சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
    செப்பிட வாழ்பவர் பெருந்தகையே!" என
    எண்ணுவோம் நாமே!

    ReplyDelete