Friday, April 14, 2017

இத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே!



இத்தரை மீதினில்
சித்திரைப் பெண்ணே
எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
என்னென்ன புதுமைகள் தந்தாய்

எண்ணிப் பதினொரு
இன்னுயிர் தோழியர்
நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
நடந்து வருவதும் என்னே

ஆண்டுக் கொருமுறை
மீண்டும் வருமுன்னை
வேண்டுவார் பற்பல நன்மை-அது
ஈண்டுள மக்களின் தன்மை

இல்லாமை நீங்கிட
ஏழ்மை மறந்திட
வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
கொல்லாமைத் தந்திடு வாயே

ஏரிக்குள மெல்லாம்
எங்கும் நிரம்பிட
வாரி வழங்கிடு வாயா-வான்
மாரி வழங்கிடு வாயா

புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. சித்திரைப் பெண் மனது வைப்பாளா :)

    ReplyDelete
  2. அருமை ஐயா வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சித்திரைப் பெண்ணுக்கு ஒரு கேள்வி....

    சிறப்பான கவிதை ஐயா.

    ReplyDelete
  4. அந்தநாளில், சந்தக் கவிமணி தமிழழகன் என்றொருவர் இருந்தார். சித்திரை மகளே வருக, தை மகளே வருக..என்று எழுதுவார். இளம்வயதில் அக்கவிதைகளை படிக்கும்போது சந்தம் என்னை பிரமிக்கவைக்கும்.

    இன்று உங்கள் புத்தாண்டுக் கவிதையும் அப்படியே! உங்கள் ஒவ்வொரு கவிதையுமே சந்தம் நிறைந்தவை என்பதில் ஐயமில்லை. எனினும் இந்தக் கவிதையை மிகவும் ரசித்தேன். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கு!

    - இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி

    ReplyDelete
  5. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...