Wednesday, April 12, 2017

கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன் கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!



கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்படும் அறிவீரா? -உடன்
நிம்மதி ஏற்பட செய்வீரா?


பட்டப் பகலில் நடக்கிறதே-பெரும்
பணமே கொள்ளை! அடிக்கிறதே!
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
வெறியுடன் ஊரில் திரிகிறதே!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!

புலவர் சா இராமாநுசம்

7 comments:

  1. முடிவெடுக்க வேண்டியவர்களே
    இன்று கொட்டமடித்துக் கொண்டிருப்பதை
    என்ன வென்று சொல்வது ?

    அனைவருள்ளும் பொங்கும்
    ஆதங்கத்தை அருமையாகப்
    பதிவு செய்துள்ளீர்கள்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் - என்றான் பாரதி. மேலிருப்பவன் கோடிகளில் ஊழல் செய்கிறான். கீழிருப்பவன் கொலை கொள்ளை மூலம் முடிந்தவரை ஈட்டுகிறான். உங்கள் கவலை நியாயமானதே.

    ReplyDelete
  3. மனம் நொறுங்கச் செய்த நிகழ்வு..

    ReplyDelete
  4. அநியாய மிழைப்பவர்களின் மீது காணொளி சாட்சியம் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாதா

    ReplyDelete

  5. நல்ல பாட்டு வரிகளில்
    சொல்லிய நாட்டு நிலைமை
    தலைவர்களுக்கு எட்டுமா?

    ReplyDelete