எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது-நல்ல
இல்லறம் ஒன்றேதான் என்றுமினிது!
பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்
பிழையின்றி பேசலே மொழிக்கினிது!
கண்ணியம் காத்தலே மாந்தர்க்கினிது-கல்வி
கற்றாரைக் காமுற்று காணலினிது!
புண்ணியம் தேடலே வாழ்விலினிது-செய்யும்
பொதுவாழ்வு தன்னிலே நேர்மையினிது!
கொல்லாமை விரதாமாய்க் கொள்ளலினிது-நளும்
கொள்கையின் வழிநாடி நடத்தலினிது!
இல்லாமை நோயின்றி இருத்தலினிது-தம்மின்
இயல்பாலே காண்போரைக் கவர்தலினிது!
சொல்லாமை பொய்தன்னை அறத்திலினிது-எதுவும்
சொந்தமெனச் சொல்வதை மறத்தலினிது!
கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக்
கயவரைக் கண்டாலே விலகலினிது!
புலவர் சா இராமாநுசம்
அருமை ஐயா மிகவும் ரசனைக்குறிய வரிகள்
ReplyDeleteத.ம.1
நன்றி!
Deleteஆஹா, பொழுது விடிந்ததும் 'இனிய' கவிதை!
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி
நன்றி!
Deleteஅருமை ஐயா
ReplyDeleteநன்றி!
Delete
ReplyDelete"பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்
பிழையின்றி பேசலே மொழிக்கினிது!" என்பதை
எல்லோரும் பின்பற்றுவதே நலம்!
நன்றி!
Deleteபதினாறும் இனிது :)
ReplyDeleteநன்றி!
Deleteநான்சொல்ல வந்தைத பகவான் ஜி சொல்லிவிட்டார்
ReplyDeleteநன்றி!
Deleteஉங்கள் கவிதையும் இனிது....
ReplyDeleteநன்றி!
Deleteஉங்களின் கவிதையைப் படித்து அனுபவித்தல் அதனினும் இனிது ஐயா.
ReplyDeleteநன்றி!
Delete