ஏட்டளவில் சமஉரிமை மகளிர்க் கென்றே-சொல்லி
ஏழாண்டாய் ஏமாற்றி வருதல் ஒன்றே
நாட்டளவில் காணுகின்ற அவலம் இன்றே-நம்முடை
நாடாளும் மன்றத்தில் நடக்க நன்றே
வீட்டளவில் கூடசம உரிமை இல்லை-எனில்
வீணாக மகளிர்தினம் !எதற்குத் தொல்லை
பாட்டளவில் சொல்லுவதா துயரின் எல்லை-உலகில்
பாவையராய் பிறந்தாலே பல்வகைத் தொல்லை!
புலவர் சா இராமாநுசம்
உண்மை நிலை ஐயா
ReplyDeleteஅருமை ஐயா...
ReplyDeleteஇனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் - என்றும்...
உண்மை ஐயா
ReplyDeleteபெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டுமாமே
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
உண்மையின் யதார்த்தம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-