கோடைக் காலம் வந்துதுவே -எங்கும்
கொளுத்திட வெய்யில் தந்ததுவே !
ஆடை முழுதும் நனைந்திடவே -உடல்
ஆனதே குளித்த தாய்ஆகிடவே !
ஓடை போல நிலமெல்லாம்- காண
உருவம் பெற்று வெடித்தனவே !
வீ(ட்)டை விட்டே வெளிவரவே -மனம்
விரும்பா நிலையை அனல்தரவே !
பச்சைப் பயிரும் பொசுங்கிடவே -அற
பசுமை முற்றும் நீங்கிடவே !
உச்சியில் வெய்யில் வந்ததெனில் -நம்
உடம்பைத் தீயென தொட்டதனல் !
மூச்சை இழுத்தால் அக்காற்றும் -அந்த
மூக்கை சுடவே அனல் மாற்றும் !
சேச்சே என்ன வெயிலென -வெதும்பி
செப்பிட வார்தை செவிவிழுமே !
பத்து மணிக்கே பகல்தன்னில் -நம்
பாதம் பட்டால் சுடும்மண்ணில் !
எத்தனை வேகம் காட்டுகின்றார் -ஓட
எங்கே நிழலெனத் தேடுகின்றார் !
இத்தனை நாள்போல் வீட்டோடு -இன்றும்
இருந்தால் எதற்குஇந்தச் சூட்டோடு !
பித்தனைப் போலவர் தமக்குள்ளே-துயரில்
புலம்பிட கேட்குதே செவிக்குள்ளே !
வற்றிய நீர்நிலை இல்லாமே -நீண்டு
வளர்ந்த புல்பூண் டெல்லாமே !
பற்றி எரிய முற் றாக -மேலும்
பறந்திடக் காற்றில பஞ்சாக !
வெற்றிடம் தன்னில் கால் நடைகள் -அந்தோ
வெறுமையாய் வாயை மென்றிடவே !
சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -ஏதுமின்றி
சுருண்டது அந்தோ பசியாலே !
புலவர் சா இராமாநுசம்
இன்றைய வெயிலின் நிலைப்பாடு
ReplyDeleteநன்றி!
Deleteவெயில் தாங்க முடியவில்லை ஐயா
ReplyDeleteநன்றி!
Deleteஇப்படியொரு அருமையான கவிதையைப் பெறுவதற்குத்தான் வெம்மை தகித்ததோ ? நல்லவேளை, இன்னும் சிறிது காலம் நான் குளிர்நிலவும் பகுதியில்தான் இருப்பேன்...
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி
நன்றி!
Deleteமுதுமையில் வெயில் அதிகமாவே சுடுகிறதே அய்யா :)
ReplyDeleteநன்றி!
Deleteகத்திரி வெயில் வருகிறதே
ReplyDeleteமுன்னரே புலவரின் குரல் சொல்கிறதே
வாட்டும் வெயில் காட்டும் கொடுமையை
நன்றி!
Delete