Monday, March 20, 2017

கொசுவே கொசுவே என்செய்வேன்—உந்தன் கொடுமையில் தப்பி நான்உய்வேன்!



கொசுவே கொசுவே என்செய்வேன்—உந்தன்
கொடுமையில் தப்பி நான்உய்வேன்
கசியா இரத்தம் உண்மைதான்-ஆனால்
கடித்தபின் அரிக்கும் தன்மைதான்
நிசியா பகலா என்றில்லை-துயிலும்
நீங்கிட வாட்டுதல் நன்றில்லை
வசியா இடமெது காட்டிவிடு-இன்றேல்
வாயை மூடியே ஓடிவிடு


புலவர் சா இராமாநுசம்

6 comments:

  1. கொசுதானே என்று இந்த மானிடன் அதை அற்பமாக நினைத்தாலும், அதன் கடி மனிதனுக்கு பெரிய துன்பம்தான். இந்த வெயில் காலத்திலும் கொசுவால் படும் துன்பத்தை கவிதையாக்கி விட்டீர்கள். இதே போல, மூட்டைப்பூச்சி கடி பற்றி நீங்கள் எழுதிய கவிதையை படித்து இருக்கிறேன்; அந்தக் கவிதையை எனது பதிவு ஒன்றிலும், மேற்கோளாகச் சொல்லி இருக்கிறேன்.

    ReplyDelete
  2. கொசு இல்லா இடமேது? கொசுக்கவிதை ரசிக்க வைக்கிறது!

    ReplyDelete
  3. கொசு தரும் தொல்லை அருமையான வரிகளில். நன்றி ஐயா.

    ReplyDelete
  4. மாம்பலம் கொசு அந்த நாளில் உலகப்புகழ் வாய்ந்தது என்பார்கள். ஆனால் நான் 1974இல் மாம்பலத்தில் குடியேறிய பிறகு, சில வருடங்களிலேயே கொசுக்களின் தாக்கம் குறைந்துவிட்டது. படிப்படியாக அவை நங்கநல்லூர், சின்மயாநகர், வளசரவாக்கம், வேளச்சேரி, போரூர் என்று இடம்பெயர்ந்துவிட்டன. இப்போது எப்படி அவை மறுபடியும் மாமபலத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கு வந்தன என்று தெரிந்தாகவேண்டும். தினகரனிடம் சொல்லி விசாரணை கமிஷன் போடுங்கள்.
    -இராய செலப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  5. மட்டை பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  6. கொசுவே கொசுவே என்செய்வேன்
    அருமை ஐயா!

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    ReplyDelete