தேசியம் என்றாலே பொருளறிய தாரே
தேசியம் பேசுவதா திருத்துவது யாரே
பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே
தினந்தோறும் மீனவரின் துயரமே இன்றே
கூசாதா அரசுக்கு தேசியம் பேச
கொட்டவும் குனிவதா கேலியவர் பேச
பேசாதீர் இந்திய தேசியம் பற்றி
பரவட்டும் எதிர்பெனும் தீமிகப் பற்றி
எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்
கச்சத் தீவை கயவர்கள் கையில்
காரண மின்றியே கொடுத்தமே வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
ஆடும் ஆட்டம் சொல்லியே பயனில்
துச்சமே அவரென துரத்துவோம் இன்றே
துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சமே இன்றியே அனைவரும ஓட
மேதினி முற்றுமே நம்புகழ் பாட
புலவர் சாஇராமாநுசம்
இன்றைய உண்மை நிலை இதுவே ஐயா
ReplyDeleteசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஆராய்ச்சி செய்யத் தெரிந்த ,கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தத் தெரிந்த தேசியத்துக்கு இங்கே பக்கத்தில் சிங்கள வெறியர்கள் செய்யும் செயலைத் தான் அடக்கத் தெரியவில்லை :)
ReplyDeleteதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
Deleteதுச்சமே அவரென துரத்துவோம் இன்றே
ReplyDeleteதுரத்தியே ஆகவேண்டும் ஐயா
தார்மீகக் கோபம் செவிடன் காதில் ஊதிய சங்கு
ReplyDeleteதேசீயக் கட்சிகளிடம் தமிழக அரசியல் போனால் மட்டுமே இந்த நிலைமை மாறும் என்று தோன்றுகிறது. திராவிடக் கட்சிகள் சுய ஆதாயத்திற்காக மத்திய அரசிடம் உறுதியோடு எதிர்த்து நிற்கத் தயங்குகிறார்கள்.
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி
உண்மை ஐயா...
ReplyDeleteதமிழை வைத்து தே'சீ'யம் பேச புறம் பட்ட சில கோ'மா'ளிகள்.தமிழ்ப் பால் நம் பற்று பற்றி ஐயம் கொள்கையில் பற்றி கொண்டுதா'ன்' வருகிறது.
ReplyDelete