ஏடெடுத்தேன் ஏதேனும் எழுத எண்ணி- ஆனால்
இதயத்தில் எண்ணத்தில் குழப்பம் பண்ணி!
நாடகத்தில் காணுகின்ற காட்சி போன்றே-நாட்டில்
நடக்கின்ற அவலங்கள பலவும் தோன்ற!
காடகத்தில் வாழ்கின்ற உணர்வே பெற்றேன்-மாறும்
காலம்வரல் கானல்நீர்! அறிய லுற்றேன்!
ஊடகத்தாற் உண்மைகளை எழுத மாட்டார்-மக்களோ
ஊமைகளாய் வாய்பொத்தி எதிர்ப்பு காட்டார்!
புலவர் சா இராமாநுசம்
இவர்களுக்கு வியாபாரமே குறிக்கோள் ஐயா
ReplyDeleteஇவர்களுக்கு வியாபாரமே குறிக்கோள் ஐயா
ReplyDeleteஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?ஆர்கே நகர் தேர்தல் முடிவு ,முடிவு கட்டும் அய்யா :)
ReplyDeleteகானகத்தில் கூட நிம்மதியான வாழ்வு கிடைக்கும் - மனிதன் தன் சுயநலத்துக்கு அதையும் முற்றிலும் அழிக்கும்வரை!
ReplyDeleteவிரைவில் நல்லதொரு தீர்வு வரும் ஐயா...
ReplyDeleteநல்லது நடந்திட காலம் வருமென காத்திருப்போம்.
ReplyDelete"ஊடகத்தாற் உண்மைகளை எழுத மாட்டார்-மக்களோ
ReplyDeleteஊமைகளாய் வாய்பொத்தி எதிர்ப்பு காட்டார்!" என்றவாறு
நாட்டு நிலைமை கெட்டுப் போச்சே!