சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர்
சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்
அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்
ஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்
தமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே
தக்கது என்பாரே! அறியாராம் கரவே
இமயோரும் காணத இன்பத்தைப் பெறுவர்
இறைவாநீ! என்றுமே மன்னனைத் தொழுவர்!
பல்லோரின் பகையாலே பாதகம் இல்லை
பலமிக்க மன்னர்க்கு வாராது தொல்லை
நல்லோரின் துணையின்றி நாடாள முயலா
நல்லது கெட்டது அறிந்திட இயலா
வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!
புலவர் சா இராமாநுசம்
அறிந்தால் சரி தான் ஐயா...
ReplyDeleteநல்லதே நடக்குமேன்று நம்புவோம் அய்யா :)
ReplyDeleteஎன்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம் ஐயா
ReplyDeleteநல்ல நம்பிக்கையே ஊன்று கோல்
ReplyDeleteஅய்யா, உங்களின் மேலான அறிவுரைகள் அந்த அம்மாவின் காதுகளில் ஏறும் என்றா நினைக்கிறீர்கள்? "...கெடுப்பார் இலானும் கெடும்" என்று வள்ளுவர் சொன்னாரே, அது நடந்துவிடும்போல் இருக்கிறது. - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
ReplyDelete