இன்றென் மனைவி பிறந்தநாளே-நெஞ்சில்
என்றும் மறவா சிறந்தநாளே
கன்றுமுட்ட சுரக்கும் பாலென-வாழ்ந்த
காலம் முழுவதும் சேயென
நன்றென என்னைக் காத்தவளே-என்னை
நடைப் பிணமாக்கி நீத்தனளே
சென்றன எட்டே ஆண்டுகளே –நாளும்
செயல்பட அவளதரும் தூண்டுதலே
புலவர் சா இராமாநுசம்
அப்பப்பா தமிழகமே தாங்காதய்யா-ஆள்வோர்
அலங்கோலம்! அவலமிது !நீங்காதய்யா
தப்பப்பா நடப்பதெல்லாம் ஆயினின்று-தமிழன்
தலைகுனிய வைத்தனரே இதுவாநன்று!
செப்பப்பா ஏதுவழி செம்மையுறவே-நல்லோர்
சிந்தையெலாம் துயர்தன்னில் வெம்மையுறவே
எப்பப்பா முடிவிதற்கு விரைந்து காண்பீர்-பொறுப்பு
ஏற்றவரே! ஆளுநரே வாரும் மாண்பீர்
புலவர் சா இராமாநுசம்
என்னமோ நடக்குது
ஏதேதோ நடக்குது நடராசா-தில்லை
நடராசா
முன்னபின்ன தெரியல
முழுமையா புரியல நடராசா-தில்லை
நடராசா
மின்னலென மறையுது
மேகமென விரையுது- நடராசா-தில்லை
நடராசா
இன்னலிது தந்துவிட
இதயமது நொந்துவிட-நடராசா-தில்லை
நடராசா
புலவர் சா இராமாநுசம்
என்றும் அவர்கள் உங்கள் துணை இருப்பார்கள் ஐயா...
ReplyDeleteஉங்கள் நினைவில் என்றும் வாழ்வார் உங்கள் துணை.
ReplyDeleteநினைவுகள் இனிமை! அய்யா எப்படி இருக்கிறீர்கள்? சனிக்கிழமை சந்திக்க வருகிறேன்..
ReplyDeleteஇல்லறத் துணையின் நீங்க நினைவுகள் என்றென்றும் பக்கத் துணையாய் இருக்கும் ஐயா
ReplyDeleteதங்கள் துணையைப் பற்றிய கவிதை மனதை நெகிழவைத்தது.
ReplyDelete/என்னமோ நடக்குது
ReplyDeleteஏதேதோ நடக்குது நடராசா-தில்லை/ நாட்டிலா இல்லை உங்கள் மனசிலா