Tuesday, February 21, 2017

முகநூலும் மூன்று கவிதைகளும்!

இலவுகாத்த கிளியானாய் மினியம்மா-உண்ண
இறைவன்தந்த வரம்தானே களியம்மா
உலவிடுவேன் சிங்கமென மினியம்மா-நீங்க
உரைத்தபின்னர் பற்றியது சனியம்மா
நிலவுபோல தேய்பிறையாய் மினியம்மா-கனவு
நீங்கியது விடாதினி சனியம்மா
பலவேசெய்தும் பயனில்லை மினியம்மா-வந்த
பாதையிலே பழுதுமிக சனியம்மா


புலவர் சா இராமாநுசம்


ஆளுனரே! ஆளுனரே எங்கே போறிங்க!-நீங்க
ஆளவந்த பின்நடக்கும் கூத்து பாருங்க
நளுமிங்கே நடப்பதெல்லாம் வெக்க கேடுங்க-இனியும்
நம்புதற்கு ஏதுமில்லை! முடிவு தேடுங்க!
மாளுவாங்க போருமிட்டு ! அமைதி போகுங்க-இங்கே
மக்களுக்கு வாழ்கையே துன்ப மாகுங்க!
ஆளுனரே! ஆளுனரே ஆய்ந்து பாருங்க-உண்மை
அறிந்த பின்னர் விடிவு கூறுங்க!


புலவர் சா இராமாநுசம்

எதையும் சொல்லிப் பயனில்லை
யாரையும் நொந்தும் பயனில்லை
கதையிலும் காணாத் திருப்பங்கள்
கண்டிட மக்கள் விருப்பங்கள்
புகையும் எரிமலை போன்றதுவே
பொங்கிடக் காண்பீர் தோன்றதுவே
பகையும் தீர்ப்பர் ஒருநாளே
பாரீர் விரைவிலத் திருநாளே


புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. மாறுதலுக்காக நான்கரை வருடங்கள் காத்திருக்கப் பொறுமை இல்லையே ஐயா....

    ReplyDelete
  2. சமகால உண்மைகளை
    சட்டென பாட்டாக்கி
    பகிர்ந்தமை அருமை!

    ReplyDelete
  3. நாணத்தால் நா நாணுகிறேன். அவர் (கிள்ளை).

    ReplyDelete
  4. உங்கள் கரத்தால் கவிதை வடிக்கப்பெறும் பாக்கியம் மினியம்மாவுக்குகிடைத்ததை எண்ணிப் பொறாமைப்படுகிறேன் ஐயா! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete
  5. இன்றைய நிகழ்வூகளை
    கவிதையாக்கிய விதம் அருமைஐயா

    ReplyDelete
  6. ஆசையிருக்கு .....அதிர்ஷ்டமிருக்கு .....பழமொழிதான் நினைவுக்கு வருகிறது அய்யா :)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...