ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
உடைந்தால் வருவது வீழ்வாகும்
உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
உறவே கொண்டால் உம்மோடும்
மற்றவர் தருவது அன்பாகும்-இதை
மறப்பின் வருவது துன்பாகும்
கற்றவர் கல்லார் பேதமிலை-நாளும்
கருதி நடப்பின் சேதமிலை
சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
சமயப் பூசல் வேண்டாமே
பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
வேதனை ஒன்றே மிஞ்சிடவே
ஆதியில் உண்டா சாதியென-நீர்
ஆய்ந்தால் அறிவீர் பாதிலென
புலவர் சா இராமாநுசம்
நாம் எதிர்பார்த்த படியே இளைய சமுதாயம் வீறு கொண்டு எழுந்து வருகிறது அய்யா :)
ReplyDeleteமாற்றம் வரும் காலம் கை கூடி வருகிறது ஐயா
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஒற்றுமை இல்லாதிருப்பதில் யாவரும் ஒற்றுமையோடு இருக்கிறார்களோ
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமை ஐயா
ReplyDeleteஉண்மை
மிக்க நன்றி!
Deleteநல்லதொரு மாற்றம் வரட்டும்....
ReplyDeleteநல்ல கவிதை ஐயா.