குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை
குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே
வடிக்கும் ஏழைத் தாய்குலமே தாண்டவக் கோனே-கண்ணீர்
வற்றாத நதியாக தாண்டவக் கோனே
விடிவுவரும் நாளேதான் தாண்டவக் கோனே-மது
விலக்கு வேண்டுமடா தாண்டவக் கோனே
முடியரசே பாரதத்தில் தாண்டவக் கோனே-அதுவரை
முடிவெடுத்தால் உண்மைதானே! தாண்டவக் கோனே
காணுகின்ற இடமெல்லாம் தாண்டவக் கோனே-மதுக்
கடைகள்தான் காணுதடா தாண்டவக் கோனே
நாணமின்றி நங்கையரும் தாண்டவக் கோனே- குடித்தல்
நாகரீக மானதடா தாண்டவக் கோனே
கோணல்வழி போவதுவே தாண்டவக் கோனே- வாழும்
கொள்கையென ஆயிற்று தாண்டவக் கோனே
பூண வேண்டும் மக்களிதை தாண்டவக் கோனே-நாடு
பூராவும் மதுவிலக்கு தாண்டவக் கோனே
புலவர் சா இராமாநுசம்
அருமை ஐயா இன்றைய அவலநிலையை சரியாக சொன்னீர்கள்
ReplyDeleteத.ம.1
நன்றி!
Delete1970களில் தமிழகத்தின் இளைஞர் பலரும் மதுவை தீண்டியதில்லை மதுவிலக்கு அமலில் இருந்தகாலம் அரசாங்க கஜானா நிரம்ப மது விலக்கு நீக்கப்பட்டது சரித்திரம்
ReplyDeleteநன்றி!
Deleteமக்களின் அரசு இப்படியெல்லாம் செய்யவே செய்யாது :)
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் ஐயா...
ReplyDeleteநன்றி!
Deleteசிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா....
ReplyDeleteநன்றி!
Deleteசரியாகச் சொன்னீர்கள் ஐயா...
ReplyDelete