Saturday, January 14, 2017

போகி விழா கவிதை!



வேண்டாத பொருள்களையே வீட்டை விட்டே
வீசியதை விடிகாலை அனலில் இட்டே!
ஆண்டாண்டு காலமாக போகி என்றே
அழைத்திட்ட உழவனவன் அழுது இன்றே
பூண்டோடு பூண்டாக பயிரும் மாய!
பசியோடு இல்லத்தில் வயிரும் காய
கூண்டோடு அழிவானோ தெரிய வில்லை!
குடும்பத்தில்! துயருக்கு எதுதான் எல்லை!?


புலவர் சா இராமாநுசம்

11 comments:

  1. அனைவருமே அழிய நேரும் ஐயா...

    ReplyDelete
  2. எந்த உழவனும் அழாதிருக்க வேண்டி வாழ்த்துகள்

    ReplyDelete
  3. உலகத்தார்க்கு ஆணி விவசாயி ,அந்த விவசாயிக்கே ஆணி அடிப்பது சரியில்லை !

    ReplyDelete

  4. பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete