பாங்காக இட்டபயிர் கருகிப் போக-தினம்
பாடுபட்ட விவசாயி உள்ளம் வேக
தாங்கொணா துயரத்தால் இரண்டே நாளில்-அந்தோ
தன்னுயிரைத் பதினெட்டு பேரும் தந்தார்
ஆங்கிலப் புத்தாண்டே அடுக்கும் செயலா-உந்தன்
ஆரம்பம் இதுவானால் வாழ்வே புயலா
தீங்கின்றி நீசெல்ல தூண்டு கின்றோம்-காக்க
தெய்வத்தை மறவாது வேண்டு கின்றோம்!
புலவர் சா இராமாநுசம்
புது ஆண்டிலும் கூட பிரச்சினைத் தீர்வதாக தெரியவில்லையே அய்யா :(
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஉழுதுண்டு வாழ்வோரிடம் யாரும் தொழுதுண்டு செல்வதாகத் தெரியவில்லையே ஐயா. என்று மாறும் இந்த வேதனை?
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்!
சிரமம் தான் ஐயா...
ReplyDeleteஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
தொடரும் சோகம்...... :(
ReplyDeleteமழையும் ஏமாற்றுகிறது.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteதொடரும் சோகம்... புத்தாண்டிலும்....
ReplyDeleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
புத்தாண்டிலாவது நிலை சீராகும் என நம்புவோம் ஐயா.
ReplyDeleteதங்கள்1கவிதையை2சற்றே3இடைவெளிக்குப்பின்4வாசிக்கிறேன்5கருத்து6கவலையளித்தாலும்7கவிதையின்8திறன்9மகிழ்ச்சி8அளிக்கிறது.
ReplyDeleteதங்கள்1கவிதையை2சற்றே3இடைவெளிக்குப்பின்4வாசிக்கிறேன்5கருத்து6கவலையளித்தாலும்7கவிதையின்8திறன்9மகிழ்ச்சி8அளிக்கிறது.
ReplyDelete