படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில்
பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!
முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில்
முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!
வடிவில்லா பாத்திரங்கள் நடிக்கயிங்கே-விரைவில்
வந்திடுமாம் வடிவதற்கு காண்பீரிங்கே!
விடிவில்லா இரவுகளாம் இன்றேயிங்கே-விரைவில்
விளக்கமுற அறிவீர்கள தெளிவாயிங்கே!
புலவர் சா இராமாநுசம்
அறங்கூறும் பாட்டெழுதிப் பாருங்களேன் விளைவுகள் ஏதாவது தெரிகிறதா என்று
ReplyDeleteஎதற்கும் ஒரு முடிவு உண்டு ஐயா...
ReplyDeleteஉங்களுடன் சேர்ந்து நாங்களும் எதிர்பார்க்கிறோம் ஐயா.
ReplyDeleteதொடரும் நாடகம்.... முடிவு எப்போது!
ReplyDelete