ஏசுவே மீண்டும் வாரும்
இங்குள்ள நிலையைப் பாரும்
பேசுவ அனைத்தும் பொய்யே
பிழைப்பென! காண்பீர் மெய்யே!
கூசுவ அரசியல் போக்கே!
குறைகண்டே விரைந்தே நீக்க!
தூசிவ! துடைக்க வாரும்!
துயர்போக எம்மைக் காரும்!
இங்குள்ள நிலையைப் பாரும்
பேசுவ அனைத்தும் பொய்யே
பிழைப்பென! காண்பீர் மெய்யே!
கூசுவ அரசியல் போக்கே!
குறைகண்டே விரைந்தே நீக்க!
தூசிவ! துடைக்க வாரும்!
துயர்போக எம்மைக் காரும்!
கருணையின் வடிவம் நீயாய்
காப்பதில் அன்புப் தாயாய்
பெருமையும் பெற்றவர் ஆக,
பேசுதல் நிலையாய்ப் போக!
உருவமே பெற்று வருவீர்
உலகினைக் காத்தே அருள்வீர்!
தருணமே இதுதான்! ஆகும்!
தவறிடின் ! அழிந்து போகும்!
புலவர் சா இராமாநுசம்
காப்பதில் அன்புப் தாயாய்
பெருமையும் பெற்றவர் ஆக,
பேசுதல் நிலையாய்ப் போக!
உருவமே பெற்று வருவீர்
உலகினைக் காத்தே அருள்வீர்!
தருணமே இதுதான்! ஆகும்!
தவறிடின் ! அழிந்து போகும்!
புலவர் சா இராமாநுசம்
நல்லநாளில் அருமையான கவிதை ஐயா
ReplyDeleteநல்லது நடக்கட்டும் ஐயா...
ReplyDeleteஅருமை
ReplyDeleteஉண்மை ஐயா
தம +1
நல்ல கவிதை. நல்லதே நடக்கட்டும்.
ReplyDeleteநம்புவோம்!
ReplyDeleteஏசுவும் வருவார் என்றே
ReplyDeleteஏய்த்திடும் கூட்டம் உண்டே!
மாசறு புனிதன் பேரில்
மாற்றுவார் காசைக் கொண்டே!
காசினி தனிலே இன்று
கடவுளின் சந்தை வைத்தே
நாசமே செய்தே வாழ்வார்
நரிகள்போல் சூழ்ச்சி செய்தே