வாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும்
வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக!
சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச்
சிந்தனையாம் ஒன்றே நிலையாய் நின்றே!
பாராள வந்தோரின் பாரா முகமே- வானம்
பார்கின்ற விவசாயி காண, அகமே!
கூரான வேல்கொண்டு குத்தல் போல-உள்ளம்
குமிறியழும் நிலைதன்னை காண்போம் சால!
புலவர் சா இராமாநுசம்
வருத்தம் தான். ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது இயற்கையும் வஞ்சிக்கிறது.....
ReplyDeleteஅடுத்த புயல் வராமலா போய்விடும் :)
ReplyDeleteஎதிர்பார்ப்போம் ஐயா...
ReplyDeleteபுயல் வேண்டாம் அளவான மழை வேண்டுமே எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சே
ReplyDelete