கார்திகைப் பிறந்துகூட நாராயணா- வானில்
கார்மேகம் காணலியே நாராயணா
நேர்த்திகடன் ஏதுமில்லை நாராயணா-கண்ணில்
நீர்வடிந்து வற்றிவிட நாராயணா
வார்த்தையில்லை செல்வதற்கு நாராயணா-வாழ
வழியேது உழவனுக்கு நாராயணா
தீர்த்துவிடு அவன்துயரை நாராயணா-உந்தன்
திருவடியைப் போற்றுகிறோம் நாராயணா
புலவர் சா இராமாநுசம்
நாராயணனை நம்புவோம் ஐயா
ReplyDeleteத.ம.1
நன்றி!
Deleteமாரியப்பன் அருள் செய்யட்டும் ஐயா! ஐயா உங்களிடமிருந்து எங்களின் 'கேட்டு வாங்கிப்போடும் கதை' பகுதிக்கு ஒரு கதை எதிர்பார்க்கலாமா?
ReplyDeleteமன்னிக்கவும் நண்பரே! கதையே நான் எழுதியதில்லை!தங்கள்
Deleteஅன்புக்கு மிக்க நன்றி!
நாராயணனை நம்புவோம். காப்பான்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஓர்த்துநாம் பாராமல் நாராயணா- வனம்
ReplyDeleteஒவ்வொன்றாய் அழித்துவிட்டோம் நாராயணா
பார்த்திடும் மரங்களையும் நாராயணா- வெட்டி
பசுமையற செய்தோமே நாராயணா
சேர்த்துநீர் காவாமல் நாராயணா-கடல்
சென்றுவிட அனுமதித்தோம் நாராயணா
போர்த்திடும் மழைமேகம் நாராயணா- இங்கு
பொய்த்துவிடில் என்செய்வோம் நாராயணா
சேட்டைகாரன் பதில்கண்டு நாராயணா
Deleteசெப்பமகிழ் உண்டேனே நாராயணா
காட்டதனை அழித்துவிட நாராயணா
காணவில்லை மாமழையே நாராயணா
பட்டதனை பதிலாக நாராயணா
பாடிவிட்டேன் முடந்தவரை நாராயணா
கேட்டவரம் அளிக்கின்ற நாராயணா
கேடுநீங்க செய்வாயா நாராயணா
ஓம் நமோ நாராயணா
ReplyDelete