Monday, November 14, 2016

முகநூல் பதிவுகள்!

தமிழக மக்களின் நலன் கருதி ,நம் முதல்வர் அவர்கள் மிகவும்
கடுமையாக எதிர்த்து வந்த தீங்கான பல திட்டங்கள் ஒவ்வொன்றாக
ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வருவதைக்காணும் போது தமிழ்
நாட்டை தற்போது ஆள்வது பெரும்பான்மை அண்ணா திமுகா
அரசா?????? அல்லது !!!!!!வேறா ! ஐயம், எனக்கு வருகிறது
உங்களுக்கு!!!!??


உறவுகளே !
பொதுவாக மருத்துவ மனையில் , நோயாளி
சேர்க்கப் பட்டு குணமானால் மருத்துவர் தான்
அவர் வீடுதிரும்புவது(டிஸ்சார்சு)பற்றி அறிவிப்பார் ஆனால்
, நம் முதல்வர் வீடு திரும்புவதை அவர்தான் அறிவிப்பார்
என்று,அப்பல்லோ மருத்துமனை ,அதன் தலைவர் சொல்வது!!!!
சரியா?


ஆயிரம் ஐநூறு நோட்டுகள் செல்லாது என்று அரசு சொன்னதால் தங்கநகை
விற்பனைநேற்று இரவு முடிந்து விடிந்தும் நடந்து கொண்டிருகிறேதே நகைக் கடைகளில்
இப்படி கருப்பு பணம் வெள்ளை யாகிறதே அரசு என்ன செய்கிறது
செய்யப் போகிறது !!? முன் யோசனை வேண்டாமா!!


ஐயா ஓர் ஐயம்!
நோட்டுகள் செல்லாதென சொன்னது , சரி! வரவேற்போம்! பதிலாக வரும் புதிய நோட்டுகள், ஐநூறு
ஆயிரம் என்று வந்தால் தானே முறையாக இருக்கும் அது
என்ன இரண்டாயிரம் என்ற கணக்கு!!? இதில் ஏதேனும்
மர்மம் இருக்குமோ?


பசி வந்தா பத்தும் பறக்கும் என்பார்களே அவை என்ன! கீழே ----
மானம், குடிபிறப்பு ,கல்வி,ஈகை,அறிவுடமை,பதவி,தவம்,உயர்வு,
தொழில்முயற்சி, காதல் என்பனவாம்!


திருமிகு இராகுல் காந்தி அவர்கள்
வங்கியில் வரிசையில் நின்று செல்லாத நோட்டை மாற்றினார்
இது, செய்தி!
ஆகா! என்ன எளிமை! ஒரு பழமையான தேசியக் கட்சியின்
எதிர்காலத் தலைவர் மக்களோடு தானும் ஒருவராக நின்று ,(செலவிற்கு பணமில்லாமல்) நோட்டை மாற்றிக் கொண்டது
கண்டு நாடே பாராட்டுகிறது! இது ஒன்றே இவரது அரசியல் முதிர்ச்சிக்கு , எடுத்துக் காட்டு! இதற்கு மேலும் நான் விளக்க
வேண்டுமா! கடவுளே மக்களை நீதான் காப்பாற்ற வேண்டும்!


ஒருவன் சூழ்நிலையின் காரணமாக படிக்க முடியாமல் போனாலும்
நன்கு கற்றவர்களால் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு , அறிவு
பெறுவதே போதுமானதாகும்! அதுவே தளர்ச்சி யுற்ற காலத்தில் ஊன்றுகோல் போல அவனுக்குப் பயன் படும் என்பதாம்!


புலவர்  சா  இராமாநுசம்  

14 comments:

  1. Replies
    1. வருகைக்கு மிக்க தன்றி!

      Delete
  2. சரியாக சொல்லி இருக்கின்றீர்கள் ஐயா
    ராகுல்காந்தி வரிசையில் நிற்பதெல்லாம் வேஷமே...
    மக்கள் எல்லோரையும் படிக்க வேண்டும்.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. ராகுல்காந்தி வரிசையில் நிற்பதெல்லாம் வேஷமே என்றால் மோடி வேஷம் போடாமல் இயற்கையாகவே நடிக்கிறார் என்று சொல்லாம்தானே

      Delete
    2. வருகைக்கு மிக்க தன்றி!

      Delete
  3. புலவர் அய்யா அவர்களே நீங்கள் சொன்னதெல்லாம் சரியே. எல்லோருக்குமே அந்த ரகசியம் தெரியும். இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த ரகசியம் அம்பலம் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க தன்றி!

      Delete
  4. பல்சுவைச் செய்திகள், பல அர்த்தமானவைகள். நன்றி ஐயா.

    ReplyDelete
  5. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு தேவை இல்லைதான் :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க தன்றி!

      Delete
  6. Replies
    1. வருகைக்கு மிக்க தன்றி!

      Delete
  7. பலரது மனதில் த்கோன்றும் ஐயங்களைப் பதிவாக்கி இருக்கிறீர் வாழ்த்துகள்

    ReplyDelete