இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன்
இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்
பனிக்கின்ற கண்களுடன் கண்ணீர் சிந்த-நாட்டில்
பாராது கண்துயிலும் அரசோ! இந்த-நிலையில்
கனியிருக்க காய்தேடும் கயமை போன்றே—சற்றும்
கலங்காமல் தேர்தலிலே கருத்தை ஊன்ற-கண்டு
நனிதுயரில் வாடுபவன் பாடம் தருவான்-நாளை
நடப்பதை எண்ணிடுவீர் ! துயரம் மறவான்!
புலவர் சா இராமாநுசம்
அரசு மறக்கின்றதோ இல்லையோ... நாளை மக்கள் மறந்து விடுவார்கள் ஐயா.
ReplyDeleteத.ம 2
இரண்டாண்டு பாக்கியாம் ,அதுவும் 52 கோடி ரூபாயாம் !சர்க்கரை ஆலை முதலாளிகள் விவசாயிகள் வயிற்றில் அடிப்பது முறையன்று !
ReplyDeleteநம் மக்களின் மறதி ஒன்றே அரசியல்வாதிகளுக்கு பெரும்பலம் ஐயா! இதே அரசியல்வாதிகளுக்கு கரும்பு விவசாயிகளும் துயரை மறந்து தேர்தலின்போது வாக்களிப்பார்கள். என் செய்ய.
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDelete