Friday, September 9, 2016

முகநூல் பதிவுகள்!


உறவுகளே!
சுவை மிகுந்த பழங்கள் தோட்டத்தில் இருந்தாலும் காக்கைகள், பழுத்த வேப்பழத்தையே விரும்பி உண்ணும் அது
போல ஒருவரிடம் நல்ல குணங்கள் பல இருந்தாலும் , வீணர்கள்
சிலர் அவரிடம் உள்ள இரண்டொரு தீய குணத்தையேப் பெரிது
படித்து கூறுவர்!

கோள் சொல்வதே வழக்கமாக கொண்டவனிடம் சொல்லும்
செய்தியானது, காற்றொடு கலந்த நெருப்புமாதிரி மிவும் வேகமாக
பரவும்! ஐயமில்லை!

உறவுகளே!
கண்கள் இரண்டாக இருந்தாலும் அவை இணைந்து ஒரேப்
பொருளைப் பார்ப்பது போல கணவன் மனைவி என இருவரும்
எண்ணுவதும்,செய்வதும் ஒன்றாகவே அமையுமானால், அக் குடும்பம் இனியதாக அமையும்

கல்லால் ஆன தூண் பாரம் அதிகமானால் , உடைந்து நொறுங்குமே
தவிர வளைந்து கொடுக்காது! அதுபோல மானமுள்ளோர், மானக்கேடு வரும்போது உயிரை விட்டாவது மானத்தைக் காப்பார்

கல்லாத மக்களுக்கு , கற்றுணர்ந்தார் சொற்களும், அறவழி செல்லார்க்கு அறமும் , வாழைக்கு தான் ,ஈன்ற கனியும் , கணவனுக்கு
இசைந்து ஒழுகாத மனைவியும் கூற்றுவனாக(எமன்) ஆவார்கள்

உறவுகளேடு
பழமொழிகள்!நம் முன்னோர்கள் காலம் தொட்டு, வழி வழியாக
வழங்கி வருபவை பலவாகும்! அவைகள் நேரடியாக பொருள் தருவது ஒன்றானாலும் வேறொன்றை சுட்டுவதே உண்மை! ஒரு நிகழ்வு நடை பெற்று,முழுதும் வெளிப் படாவிட்டலும்,கொஞ்சம்
வெளி வந்தாலும் அது மறைக்கப் படும் போது இப்படி சொல்வதுண்டு
நெருப்பு இல்லாமல் புகையாது, அள்ளாம குறையாது என்று
சொல்வார்கள் !இல்லையா!


புலவர்  சா  இராமாநுசம் 

7 comments:

  1. #கண்கள் இரண்டாக இருந்தாலும் அவை இணைந்து ஒரேப்
    பொருளைப் பார்ப்பது போல கணவன் மனைவி #
    நான்கு கண்களும் சேர்ந்து காணும் ஒரே கனவுதான் காதல் என்று நம்ம வைரமுத்து சொல்லி விட்டாரே அய்யா :)

    ReplyDelete
  2. நல்ல தொகுப்பு. இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  3. அருமையான பொருள் பொதிந்த சொற்றொடர்களைக் கொண்ட பயனுள்ள பதிவு. நன்றி ஐயா.

    ReplyDelete
  4. Amazon Audio Sale Offer சலுகையாக - 60% வரை ஆஃபர் Head Phones & Speakers வாங்குவதற்கு தருகிறார்கள் Head Phones & Speakers வாங்க நினைப்பவர்கள் இந்த ஆஃபர் பயன்படுத்தி உங்களது பணத்தை மிச்ச படுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு
    amazontamil

    ReplyDelete
  5. அருமையான தொகுப்பு ஐயா!

    ReplyDelete