இனவழி அனைவரும் ஒன்றாக-நாம்
இணைந்தால் போதும் நன்றாக!
மனவழி கட்சிகள் மறையட்டும்!-தமிழ்
மரபைக் காத்திட பறைகொட்டும்
சினவழி முடிவு எடுக்காமல்-நன்கு
சிந்தித்து எதையும் கெடுக்காமல்
அனைவரும் ஒன்றென செய்வீரே-பெரும்
அறப்போர்! நடத்திடின் உய்விரே!
வணிகர் மாணவர் தொழிலாளி-உணவு
வழங்கும் உழவர்! இன்னபிறர்
அணியென பெண்ணினம் எழுமானால்-உலக
அரங்கில் அக்குரல் விழுமானால்
பணிந்திடும் மத்தியும் அப்போதே-நாள்
பார்ப்பதா..?புறப்படும்! இப்போதே
பிணியது! மருந்திது! செயல்படுவீர்!-தஞ்சைப்
பெருநிலம் அழியவா வழிவிடுவீர்!?
புலவர் சா இராமாநுசம்
நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்று சொல்லப் படுவதைப் போல ,இன வழி நாம் ஒன்று சேர்வதே சரியாக இருக்கும் !
ReplyDeleteஇணைவோம்.
ReplyDeleteநல்ல வரிகள் ஐயா!
ReplyDeleteவணக்கம் ஐயா !
ReplyDeleteகாலத்துக்கு ஏற்ற கவிதை அருமை அழகு !
OK
ReplyDeleteநல்ல கவிதை. நன்றி ஐயா.
ReplyDelete