Saturday, September 24, 2016

இன்று புரட்டாசி சனிக்கிழமை! எனவே, இப்பாடல்!




இன்று புரட்டாசி சனிக்கிழமை! எனவே, இப்பாடல்!

ஏழுமலை வேங்கடேசா கோவிந்தா-போற்றி
எழுதுகின்றேன் பெருமாளே பாவிந்த
வாழும்வரை நான்மறவேன் கோவிந்தா-நான்
வாழ்வதெல்லாம் உம்மாலே பாவிந்தா
பாழுமனம் மட்டுமேனோ கோவிந்தா- நாளும்
பரிதவிக்க விடுவதேனோ! பாவிந்தா
சூழுமலை எங்கனமே கோவிந்தா –மக்கள்
சுற்றிவர ஒலிப்பதொன்றே கோவிந்தா!


புலவர் சா இராமாநுசம்

13 comments:

  1. பெரிதும் பாடி மகிழும் வண்ணம்
    பாடல் அமைந்து இருக்கிறது.

    வலஜி ராகத்தில் என்னால் இயன்ற அளவு பாடுகிறேன்.
    பொறுத்தருள்க.

    கோவிந்தா கோவிந்தா.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. #நாளும்பரிதவிக்க விடுவதேனோ!#
    கோவிந்தன் உங்களை ரட்சிப்பார்!

    ReplyDelete
  3. கோவிந்தா போற்றி....

    ReplyDelete
    Replies
    1. நேரில் வந்து சந்தித்தீர் நன்றி ஓர் உதவி!தாங்கள் தாயகம் திரும்பும்
      போது கொசு பிடிக்கும் பேட் இரண்டு (முடிந்தால்) வாங்கி வாருங்கள்!உரிய தொகையை நேரில் தருகிறேன்!தொல்லைக்கு மன்னிக்க!

      Delete
  4. மாலவனின் தாள்பணிந்தேன் கோவிந்தா- இந்த
    மானுடர்க்கு அருள்புரிவாய் பாவிந்தா
    ஞாலமதை காப்பதற்கே கோவிந்தா- ஒளிர்
    ஞாயிறுபோல் வந்திடுவாய் பாவிந்தா
    நீலநிறம் கொண்டவனே கோவிந்தா- தினம்
    நெஞ்சதனில் நிற்பவனே பாவிந்தா
    காலமது மாறியதே கோவிந்தா- ingu
    கல்கியென வந்திடுவாய் கோவிந்தா

    ReplyDelete
    Replies
    1. என் பாடலைவிட தங்கள் பாடல் அருமை!

      Delete
  5. இசைமீட்டிப் பாட ஏற்ற சந்தம் !

    இனிய இறைதுதி அருமை ஐயா.

    தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  6. அருமையான வரிகள்
    பாராட்டுகள்

    ReplyDelete