Wednesday, September 21, 2016

முகநூல் பதிவுகள்!


ஆற்றின் நீர் வற்றி நடப்பவர் பாதங்களை சுடுகிள்ற அளவுக்கு
வெயில் காய்ந்தாலும் மணலை தோண்டினால் நீர் சுரக்கும் என்பது
தற்போது பொருந்தாது! காரணம்? ஆற்றில் மணல் இருந்தால் தானே!
அதைத்தான் அரசியல் வாதிகளும் மணற் கொள்ளையரும் முற்றிலும்
சுரண்டி எடுத்து விட்டார்களே!

கொத்துக் கொத்தாக மலர்ந்தாலும் மணமில்லா த மலரைப்போல,
எவ்வளவுதான் நூல்களைக் கற்றிருந்தாலும், அதனைப் பிறருக்கு
எடுத்துச் சொல்ல இயலதவன், கற்றவனாக , கருதப்பட மாட்டான்!
என்பதாம்!

உறவுகளே
மிகச் சிறிய கூழங்கல்லானாலும் தண்ணீரில் விழுந்தால்
நேராக தரைக்கு சென்று அமையாகி விடுகிறது! ஆனால், எவ்வளவு
பெரிய தக்கையானாலும் மேலும், மேலும் நீர் வந்தாலும் மிதக்கவே
செய்கிறது! அதுபோல, நம்,நம்முடைய வாழ்க்கையில், இன்பம் வரும்போது ,கல்லாக ,அமதியாக அடக்கத்தோடு மகிழ்ந்தும்,துன்பம் வரும்போது துடிதுப் போகாமல் மூழ்காத தக்கைபோல தாங்கிக்
கொண்டும் வாழப் பழக வேண்டும்!


சமீபத்தில் ஒரு பதிவினைப் படித்தேன்!
வானம் பெய்து மழை நீர் வெள்ளமாக ஓடி கடலில் கலக்கா
விட்டால் பெரிய கடலும் தன்னுடைய வளத்தை இழந்து விடுமாம்!
என சொல்வதாக! இதைத்தான் வள்ளுவர் பெருமானும் வான் சிறப்பு அதிகாரத்தில் வெகு அழகா
நெடுங் கடலும் தன் தன்னுடைய நீர்மைகுன்றும் என்பதை அன்றே சொன்னார்! நம் முன்னோர் அறிவியலை எவ்வளவுதூரம் அறிதுள்ளார் !என்பது மிகவும் வியக்க தக்கதல்லா!


அளவுக்கு மீறிய சொத்து சேர்க்கும் அரசியல் வாதிகளின் ஆசையே
ஊழலுக்கு காரணமாகும் !ஊழல் குற்றச் சாட்டில் வழக்கு பதிவு செய்யப் பாட்டலே போதும் ,அவர்கள் நிரந்தரமாக.அதன் பின்
வாழ்நாள் முழுதும் ,தேர்தலில் நிற்க முடியாது என நிரந்தர தடை
ஏற்பட்டாலே ,அதன் மூலம் பயம் வந்து பெருமளவு ஊழல்
குறைந்து நேர்மையான அரசியல் வாதிகள் பொது வாழ்வுக்கு
வருவார்கள்! செய்வார்களா?


நெருப்பும் நீரும் ஒன்றாக இருக்க முடியாது! நீர் பட்டாலே நெருப்பு
அணைந்து விடும்!ஆனால் நீரால் உருவாகி, நீரை தன்னகத்தே கொண்டுள்ள மேகம் மழையைப் பெய்ய முனையும் போது ஒன்றுடன் , ஒன்று மோத , தோன்றும் மின்னலும் இடியும் நெருப்புதானே! இது, விந்தையாக உள்ளது அல்லவா!


உறவுகளே!
இன்றைய சமுதாயத்தில் நாம் எப்படி வாழ்ந்தால் தக்குப்
பிடிக்க முடியும்! எண்ணிப் பார்த்தால்,தண்ணீரில் வாழும் மீனாக
இருந்தால் ,இயலாது! தரையில் விழுந்தால் வாழ்வு முடிந்து விடும்!
எனவே, தண்ணீரிலும் வாழ்ந்து தரையிலும் வாழுகின்ற தவளையை
போல ,நம்மை, நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்! அப்படி இருந்தால்
தான் ஒரளவாவது நாம் அமைதியாக வாழ முடியும்!


புலவர்  சா  இராமாநுசம்   

7 comments:

  1. தவளையின் பெருமைப் பற்றி நேற்றுதான் என் தளத்திலும் சொன்னேன் , அய்யா :)

    ReplyDelete
  2. ///அளவுக்கு மீறிய சொத்து சேர்க்கும் அரசியல் வாதிகளின் ஆசையே
    ஊழலுக்கு காரணமாகும் !ஊழல் குற்றச் சாட்டில் வழக்கு பதிவு செய்யப் பாட்டலே போதும் ,அவர்கள் நிரந்தரமாக.அதன் பின்
    வாழ்நாள் முழுதும் ,தேர்தலில் நிற்க முடியாது என நிரந்தர தடை
    ஏற்பட்டாலே ,அதன் மூலம் பயம் வந்து பெருமளவு ஊழல்
    குறைந்து நேர்மையான அரசியல் வாதிகள் பொது வாழ்வுக்கு
    வருவார்கள்! செய்வார்களா?///


    ஆனால் நம்ம அரசியல் வாதிகள் இப்படி ஒரு சட்டம் இருந்தால் நம்க்கு ஒரு முறைதான் சான்ஸ் கிடைக்கும் என்பதால் ஒரே சமயத்தில் மிக அதிகமாக சுரண்டிவிடுவார்கள்

    ReplyDelete
  3. தற்காலச் சூழல் குறித்துச்
    சொல்லிப் போனவிதம்
    மனம் கவர்ந்தது
    மதுரைத் தமிழனின் பின்னூட்டமும்..
    விரிவான அருமையான அவசியமான
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    (இன்னும் யூ எஸ்ஸில் தான் உள்ளேன்
    அக்டோபரில் தாயகம் திரும்ப உத்தேசம் )

    ReplyDelete
  4. அருமையான தொகுப்பு. நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete