மாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்
ஏக இந்தியாவாக பாரதம் இருக்க வேண்டு மென்றால் ?
இமயமுதல் குமரிவரை உள்ள அனைத்து நதிகளையும் நாட்டின்
தேசிய உடமையாக ஆக்க உடன் ஆவன செய்யுங்கள் இதுதான்
உரிய நேரம் ! தேவைக்கு மேல் மிருக பலத்தோடு உள்ள உங்கள்அரசுக்கும் தமிழக அரசும் இன்னும் பலரும் பக்க பலமாக வருவார்கள் என்பது உறுதி !பாராளு மன்றத்தை கூட்டி இக் கருத்தை
சட்டமாக்க வேண்டியது உங்கள் கடமை! உங்கள் புகழ் என்றும் வராற்றில் இடம்பெறும்! சட்டமாக்கி நடைமுறைப் படுத்த வல்லுனர்
குழுவையும் அமையுங்கள் எதிர்கால இந்திய ஒருமைப்பாடு உங்கள் கையில் தான் உள்ளது! மீண்டும் பணிவோடும் ,கனிவோடும்
வேண்டுகிறேன் நிரந்திரத் தீர்வு இது ஒன்றேதான் அத்துடன் நதி அனைத்தையும் இணைக்க,
பகுதி பகுயாக இணைக்க உரிய திட்டங்களை வகுத்து போர்க்கால நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்வது உங்கள் முக்கி கடமையாகும் சிந்தியுங்கள்!
செயல் படுங்கள் வருங்கால வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்தாக பொலிவு பெறும்
புலவர் சா இராமாநுசம்
எங்கே சொல்லப் போகிறார்கள்? புதிய அணைகள் கட்டுவதற்கு ஆந்திர, கேரளா, கர்னாடக அரசுகள் அனுமதிகோரும்போது யோசிக்காமல் அனுமதி கொடுப்பவர்கள்தானே இவர்கள்? இதற்கு எந்த அரசும் விதிவிவிலக்கல்ல.
ReplyDeleteஐயா,
ReplyDeleteசிறப்பான அறிவுரை.
அனுப்பி வைத்தீர்களா, பிரதமருக்கு?
கூடவே சொல்லுங்கள் அப்படி செய்யாவிட்டால் அவ(ர்) பெயர் தண்ணீரில் எழுதிய எழுத்தாக விளங்கும் என்று.
சொல்வது விளங்குமா அவருக்கு?
கோ
என்னுடைய பதிவுகளை பார்த்து விட்டு பதிலிடவும்... கன்னட மக்கள் நல்லவர்கள் அதை மறுக்க மாட்டேன் ஆனால் யார் யார் செய்கின்றார்கள் என்பது முக்கியம்.
ReplyDeletehttp://vriddhachalamonline.blogspot.in/2016/09/blog-post_13.html
ஆம் ஐயா நதிகளை தேசிய மயமாக்க வேண்டியது அவசியம். என் கவிதையில் கூட இதனை சொல்லி இருக்கிறேன்
ReplyDeleteஐயா
ReplyDeleteஅவரு "இங்க" இருக்காரா. இது ஒரு திட்டமிட்ட அரங்கேற்றம். பலிகடா மக்கள்
விஜயன்
அதை சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள் ?ஞாபகப் படுத்த வேண்டுமா ?
ReplyDeleteகாலத்தின் கட்டாயமிது
ReplyDeleteஅருமையாக நினைவூட்டினீர்கள்
வாழ்த்துக்களுடன்...
இக்கடிதத்தினைத் தாங்கள் தொடர்ந்து எழுதவேண்டியிருக்கும் ஐயா.
ReplyDeleteசெய்தால் நல்லது. ஆனால் செய்வார்களா என்பது பெரிய கேள்விக்குறி!
ReplyDelete