பாருக் குள்ளே நம்நாடே-புகழ்
பாரதம்! உண்டா அதற்கீடே
ஊருக்கு ஊரே! கொடியேற்றி-இன்று
ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
போற்றியே புகழ்ந்து மறுநாளே
யாருக்கும் நினைவில் வாராதே-இனி
என்றும் இந்நிலை மறாதே
வந்ததே சுதந்திரம் யாருக்காம்-நல்
வந்தே மாதரம் ஊருக்காம்
தந்தவன் சென்றான் ஆண்டுபல-அதை
தன்னல மிக்கோர் ஈண்டுசில
சொந்தமாய் தமக்கேப் போனதென-தினம்
செப்பும் நிலையே ஆனதென
நிந்தனை செய்து என்னபலன்-இந்த
நிலையை மாற்ற எவருமிலன்
வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
வேதனை தீர்ந்தது என்றாலும்
கொள்ளையர் சிலர்கை அகப்பட்டோ-நாளும்
கொடுமை அந்தோ மிகப்பட்டே
தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
தொடர்கதை யாகப் போயிற்றே
எல்லை மீறின் தன்னாலே-நாம்
இழப்போம் அனைத்தும் பின்னாலே
கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
கள்ள வாணிகம் சுதந்திரமே-பொருள்
கலப்படம் செய்யவும் சுதந்திரமே
வெள்ளம் வருமுன் அணைபோட-தூய
விடுதலை நோக்கி நடைபோட
நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
நாளில் வரமே தரவேண்டும்
புலவர் சா இராமாநுசம்
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமை. இனிய சுதந்திரதின நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteபுலவர் அய்யாவுக்கு இருக்கும் தேசபக்தி, தேசத்தை ஆளும் அரசியல்வாதிகளுக்கும் வரவேண்டும். எனது உளங்கனிந்த இந்திய சுதந்திரதின வாழ்த்துகள்.
ReplyDeleteநிலவும் நிலைதனைப் பாவில் வடித்ததற்குப் பாராட்டுகள்
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteசுதந்திரதின வாழ்த்துக்கள்
த ம 6
OK
ReplyDeleteFrom Mobile
யாருக்கு சுதந்திரம் என்பதை நன்றாக செப்பினீர்கள் அய்யா :)
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துகள்
ReplyDeleteWe provide our customers with the most up to date listing of coupons and the best deals for 2000+ Indian e-commerce sites. Now, we are out to sweeten the deal by offering Cashback to our users on top of the Discounts!
ReplyDeleteBest Deal Coupon Easy to Shop Save Your Money Super Deal Coupons Superdealcoupon
வணக்கம் ஐயா !
ReplyDeleteசுதந்திரக் கவியில் சொக்கும் மனங்கள்
மிகவும் அருமை
வாழ்த்துகள் வாழ்க நலத்துடன் !
தம +1