Wednesday, June 22, 2016

முகநூல் பதிவுகள்!



உறவுகளே!
யார் குற்றவாளி !!?
நாள் பார்த்து மண்டபம் தேடி, முறைப்படி திருமணப்பதிவு செய்ய, பதிவு அலுவலகம் சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதும் தரவில்லை என்றால் அலைகழிக்க முயல்வது நடைமுறையாகவும் பதி செய்ய வந்தவர்களும், உடனே முடிக்க தாங்களே முன்வந்து இலஞ்சம் தருவதும் இன்றும் காணுகின்ற காட்சி ஆகும்
இந்த இருவரில் யார் குற்றவாளி?

உறவுகளே நல்ல நட்பு எப்படி இருக்கும்!!?
இடுப்பில் கட்டிய வேட்டி நழுவும்போது கை தானாகவே ஓடி அதனை நழுவாமல் பற்றிக் கொள்வதைப் போல, ஒருவன் தன்னுடைய நண்பனுக்குத் துன்பம் வரும்போது தானாகவே ஓடிச் சென்று உதவி துன்பத்தை நீக்குவதாக இருக்க வேண்டும்!

தேனை உண்ணத்தான் வண்டு பூ வைத்தேடி வருகிறது என்பது பூவுக்குத் தெரியாவிட்டாலும் கவலையில்லை! ஆனால் பூவையர்க்குத் தெரியாவிட்டால் ...! விளைவு விபரீதம் தானே!

உறவுகளே!
யார் குற்றவாளி !!?
நாள் பார்த்து மண்டபம் தேடி, முறைப்படி திருமணப்பதிவு செய்ய, பதிவு அலுவலகம் சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதும் தரவில்லை என்றால் அலைகழிக்க முயல்வது நடைமுறையாகவும் பதி செய்ய வந்தவர்களும், உடனே முடிக்க தாங்களே முன்வந்து இலஞ்சம் தருவதும் இன்றும் காணுகின்ற காட்சி ஆகும்
இந்த இருவரில் யார் குற்றவாளி?

வண்டியில் பயணம் போகிறோம் ! பாதையில் நான்கு வ ழி சந்திப்பு வருகிறது நடுவிலே ஒரு கம்பம் !அது நான்கு திசைகளையும் காட்டுவதோடு அவ் வழி எந்த ஊருக்குப் போகும் என்பதையும் காட்டுகிறது! நாம் எங்கே போக வேண்டுமோ அங்கே போக நாம்தானே முனைய வேண்டும் அதுபோல நம் வாழ்க்கைப் பாதையிலும் சிலபேர் கைகாட்டி மரமாகத்தான் இருப்பார்கள்! இருக்க முடியும்! எனவே நாம்தான் முடிவு செய்ய வேண்டும்

முதல்நாளே ஆரம்பமாகி விட்டதா அமளி !? சட்டமன்றத்தில் ! இனி வரும் ஐந்தாண்டுகளும் இப்படித்தான் போகுமா! கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுவதுதானே முறை! எதற்காக உறுப்பினர் திருமிகு செம்மலை அவர்கள் சமஸ்கிரதம் பற்றி தேவையில்லாமல் பேசி பிரசன்னையை உருவாக்க வேண்டும்!
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதனை கட்டுப் படுத்த கனிவோடு வேண்டுகிறேன்!

புலவர்  சா  இராமாநுசம்

7 comments :

  1. நல்ல உவமானங்களோடு அருமையான கேள்வி ஐயா.

    ReplyDelete
  2. என் கேள்விக்கென்ன பதில் என்று கேட்டு விட்டீர்கள்.? பதில் சொல்லத்தான் இயலவில்லை. கைகாட்டிகள் மீது, போஸ்டர் நோட்டீசுகள் ஒட்டும் காலம் இது. முடிந்தால் கைகாட்டியையே தூக்கி எறிந்து விடுவார்கள். அரசன் எவ்வழி? மக்கள் அவ்வழி?

    ReplyDelete
  3. இந்தியாவில் லஞ்சம் எங்கேதான் இல்லை என்று ஒரு ஆராய்ச்சி செய்தால் ,அங்கேயும் லஞ்சம் தலை விரித்தாடும் அய்யா :)

    ReplyDelete
  4. இதுதான் குட்டையைக் குழப்புதல் என்பதோ?

    ReplyDelete
  5. தெரிந்த தெரியாத பல கேள்விகள் யாருடைய பதிலும் திருப்தி தராது என்றே தோன்றுகிறது ஆகவே டாக்டர் ஜம்புலிங்கத்தோடு உடன் படுகிறேன்

    ReplyDelete
  6. நல்ல சிந்தனைகள்...... இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...