Wednesday, June 15, 2016

இருபத்து ஐந்தாண்டு ஓடின சிறையில் –தங்கள் இளமையை கழித்தனர் தனிமையாம் அறையில்!

இருபத்து ஐந்தாண்டு ஓடின சிறையில் –தங்கள்
இளமையை கழித்தனர் தனிமையாம் அறையில்
ஒருபத்து மாதமே சுமந்தநல் தாயே -சற்றும்
ஓயாமல் நொந்து புலம்பிட வாயே
தருமத்தில் வாழ்ந்தது நம்தமிழ் நாடே -இன்று
தலைகீழாய் ஆனது யார்செய்த கேடே
எழுவர்க்கு விடுதலை என்றுமே இல்லையோ?!-அன்னார்
இருக்கின்ற வரையிலே இறப்புதான் எல்லையோ?!


புலவர் சா இராமாநுசம்

5 comments:

  1. வணக்கம் ஐயா நமது நாட்டில் தீர்ப்புகளுக்கு காலதாமதம் அளவுக்கு மீறி செல்கின்றது இதற்கு இவர்களை அன்றே தூக்கில் போட்டிருந்தால் உலகம் மட்டுமல்ல இந்த தாய்கூட மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருப்பார்.

    இதற்கு மரணமே மேல்.
    குற்றவாளிகளுக்குத்தான் தண்டனை இந்த தாய்க்கு எதற்கு ?
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்

    ReplyDelete
  3. என்று முடிவு வரப்போகிறதோ?

    ReplyDelete
  4. நீதியும் நேர்மையும் என்றோ செத்துவிட்டது. செத்தது மீண்டும் வரவா..போகிறது அய்யா....

    ReplyDelete
  5. அருமையான பதிவு

    இதோ மின்நூல் களஞ்சியம்
    http://ypvn.myartsonline.com/

    ReplyDelete