Sunday, May 8, 2016

அன்னையர் தின நினைவுக் கவிதை!



அன்னையர் தினம்!

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?


உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

23 comments :

  1. கண்களிலே நீர் மல்க பாடலைப் பாடினேன்.

    எல்லாம் அவர் என்றும் பாடி மகிழும் அந்த கோவிந்தனின் அருள்.






    இங்கும் அந்தப் பாடலைக் காணலாம்.

    ReplyDelete
  2. சிறப்புக் கவிதை
    மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  3. சுப்புத்தாத்தாவின்
    குரலில் கேட்க இன்னும் அருமை
    (சுப்புத் தாத்தா இந்தியா வந்தாச்சா ? )

    ReplyDelete
  4. அன்னையின் மகத்துவம் அறிய வைக்கும் வரிகள் ஐயா அருமை
    த.ம.2

    ReplyDelete
  5. தெய்வம் இருக்கிறதோ இல்லையோ தெய்வத்தின் குணம் பொருந்தியோரே அன்னையர் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இது அம்மா ,மற்றதெல்லாம் சும்மா :)

    ReplyDelete
  7. அன்னையர் தினத்துக்கான அருமையான கவிதை!
    த ம 5

    ReplyDelete
  8. ஐயா,

    கண்ணீரால் அபிஷேகிக்கும் அருமையான வரிகள் அன்னையர் புகழ் சுமந்து.

    கோ

    ReplyDelete
  9. அம்மாவை எண்ணி மனம் படும் துயரை உயிரோட்டம் நிறைந்த வரிகளால் சித்தரித்த விதம் தாங்கள் அம்மா மீது கொண்டுள்ள அளவு கடந்த பாசத்தை உணர்த்தி நிற்கின்றது பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  10. அருமையான கவிதை ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...