Tuesday, May 31, 2016

ஏனோ தெரிய வில்லை –என்ன எழுதுவது புரிய வில்லை!



ஏனோ தெரிய வில்லை –என்ன
எழுதுவது புரிய வில்லை
தானே ஓடி வரும் –கருத்து
தடுமாற துன்பம் தரும்
மானோ மருண்ட தென்றே – எந்தன்
மனமின்று இருண்ட தின்றே
கானோ அறியதே நானும் –நொந்து
கலங்குவதை நீரறிய வேணும்


புலவர்  சா  இராமாநுசம்

10 comments:

  1. மனம் இருண்டதாகக் கூறுகின்றீர்கள். அழகான கவிதை அல்லவோ உருப்பெற்றுள்ளது.

    ReplyDelete
  2. இதுவே கவிதைதானே ஐயா அருமை
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. மனதை வெளிப்படுத்தும் நல்ல வரிகள் ஐயா. இப்படித்தான் எங்களுக்கும் பல சமயங்களில் தோன்றும்..எழுதுவதற்கு இருந்தாலும் எழுத முடியாமல் மனம் வார்த்தைகளுக்குத் தடுமாறும்...ஐயா அருமை...

    ReplyDelete
  4. நல்ல இசை கேளுங்கள். மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் வாசியுங்கள். மனம் இலேசாகி விடும்!

    ReplyDelete
  5. விரைவில் சரியாகும். ஸ்ரீராம் சொல்வது நல்ல யோசனை....

    ReplyDelete
  6. உங்களுக்கு பிடித்தமான காரியங்களையே செய்யுங்கள். அன்பான, பழைய நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் மலரும் நினைவுகளை பதிவுகளாக்கி வெளியிடுங்கள். எல்லாம் சரியாகி விடும்.

    ReplyDelete
  7. தேர்தல் முடிவால் வந்த மயக்கமா இது அய்யா :)

    ReplyDelete
  8. எழுதும் போது மனக்குழப்பம் தீரும் ஐயா!

    ReplyDelete
  9. வலையுலகத்துக்கே பெருமை சேர்ப்பது தங்களைப் போன்ற மூத்த வர்களின் செயல்பாடுகள்தான். கலக்கம் வேண்டாம் ஏராளமாக எழுதி இருக்கிறீர்கள் அவற்றில்சிலவற்றை மீள்பதிவு செய்யுங்கள் ஐயா

    ReplyDelete