வாழ்வதும் வீழ்வதும் நம்செயலால்-அறிந்து
வாழ்ந்தால் வருந்தோம் துயர்புயலால்
தாழ்வதும் உயர்வதும் அதுபோன்றே-ஆய்ந்து
தணிவதும் பணிவதும் மிகநன்றே
ஊழ்வினை என்றென எதுவுமிலை-எனவே
ஊக்கமாய் முயன்றால் ஏதமிலை
சூழ்வது எதுவும் இவ்வாறாம் – எடுத்துச்
சொல்வதென்! வாழ்வே செவ்வாறாம்
புலவர் சா இராமாநுசம்
ஊழ்வினை என்றென எதுவுமிலை...ஆகா ,இதுதான் அய்யா உண்மை !
ReplyDeleteஅற்புதமான வரிகள் ஐயா....
ReplyDeleteஅருமை ஐயா...
அருமை ஐயா
ReplyDeleteதம=1
ஊழ்வினை என்றென எதுவுமிலை-எனவே
ReplyDeleteஊக்கமாய் முயன்றால் ஏதமிலை---உண்மை அய்யா...வக்கு3
அருமை.
ReplyDeleteவாழ்வில் நம்பிக்கையூட்டும் நல்ல வரிகள் ஐயா மிக்க நன்றி
ReplyDeleteதமிழ் மணம் முதலாவது
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை எவ்வளவு அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். நன்றி ஐயா. அனைவரும் இதை உணர்ந்து ஒற்றுமையாய் செயல்படுவோம்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
காஃபி