Sunday, April 17, 2016

தனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை தளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்!


தனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை
தளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்!
இனிமைமிகு உறவுகளே நீங்கள் வந்தீர் – நானும்
இளமைபெற மறுமொழிகள் வாரித் தந்தீர்!
பனிவிலக வெம்மைதரும் கதிரோன் போன்றே –எனைப்
பற்றிநின்ற துயர்படலம் விலகித் தோன்ற!
நனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ்
நாள்முழுதும் வணங்கிடவே என்னை வென்றீர்!


புலவர் சா இராமாநுசம்

18 comments:

  1. அருமையான வரிகள் ஐயா...

    ReplyDelete
  2. முதுமை என்பது உடலுக்கு மட்டுமே தவிர மனதுக்கு அல்ல. புதியவைகளை சிந்திக்கும் வரை, புதுமைகளை வரவேற்கும் வரை இளமை எப்போதுமே இருக்கும். தளர்வு நீங்கி புத்துணர்வு பெற்று மேலும் பல ஆக்கங்களை எங்களுக்கு தாருங்கள் அய்யா!
    த ம 1

    ReplyDelete
  3. சோர்வடைய வேண்டாம் ஐயா.. உங்கள் வயதை நாங்கள் அடையும்போது நாங்களும் இதே அளவு உற்சாகத்தைப் பெற்றிருக்க வாழ்த்துங்கள் எங்களை.

    ReplyDelete
  4. உள்ளம் சோராதிருக்க
    ஒரு வழி இங்கே.

    உற்சாகம் தரும் இடங்களுக்குச் செல்லுங்கள்.

    நானும் அதைத் தான் செய்கிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  5. ஊக்கம் தரும் உங்கள் கவிதை வரிகள் ,என்னைப் போன்றோரையும் தளர்வின்றி எழுதச் சொல்லுகிறது அய்யா !

    ReplyDelete
  6. ஊக்கமதை கைவிடேல் அய்யா.....

    ReplyDelete
  7. ஊக்கமதை கைவிடேல் அய்யா.....

    ReplyDelete
  8. உங்கள் எழுத்து எங்களை எழுதவைக்கிறது ஐயா. நாங்கள் உங்களின் எழுத்தினை அறிந்து வியக்கிறோம். உங்களின் உத்வேகம் தரும் கவிதை வரிகளிலிருந்து நாங்கள் பலவற்றை அறிந்துகொள்கிறோம். தன்னம்பிக்கை உட்பட. நன்றி.

    ReplyDelete
  9. வலையுலகம் இருக்கின்றது ஐயா இளைபாற நானும் இதைத்தான் நம்பி இருக்கின்றேன் துணையாய்.....
    தமிழ் மணம் 7

    ReplyDelete
  10. உடல் பலம் குறையும்போது மனமும் சலிப்படையத்தான் செய்கிறது. தனிமை இதை அதிகரிக்கும். பதிவுலகத்தின் ஈடுபாடு இந்த சலிப்பை ஓரளவு குறைக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. ஐயா தங்கள் வயது முதிர்ந்தாலும் மனம் இளமைதான். மனம் தளரவேண்டாம் ஐயா. நாங்கள் எல்லோரும் இருக்கின்றோம். முடிந்த போது எழுதுங்கள் வலையுலகத் தொடர்பில் இருங்கள். உங்கள் வயதை நாங்கள் அடையும் போது உங்களைப் போன்று உற்சாகமாக இருக்க வேண்டும் எங்களை எல்லாம் வாழ்த்துங்கள் ஐயா...உங்களுக்காகப் பிரார்த்திக்கின்றோம்

    ReplyDelete
  12. தமிழின் துணை இருக்கும் வரை
    தனிமைக்கு ஏது இடம்
    வலை உலக உறவுகள் இருக்கும் வரை
    மகிழ்வுக்கும் உறவுக்கும் ஏது குறை

    தொடர்ந்து தங்களின் எழுத்துக்களைக் காண காத்திருக்கிறோம் ஐயா

    ReplyDelete