Friday, April 15, 2016

கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!


கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி
கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!
ஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும்
ஒருசிலர் நோட்டினைத் தந்திடுவார்!
ஆட்டமே களைகட்டும்! பாருமிங்கே- நடக்கும்
அரசியல் வேடிக்கை! ஊதசங்கே!
நாட்டையே மேலும் நாசமாக்கும் –நாளும்
நஞ்சென விலைவாசி மோசமாக்கும்!


வாணிகம் ஆயிற்றே தேர்தலின்றே –மக்கள்
வளமுற வாழ்கின்ற நாளுமென்றே!
நாணிடும் உள்ளமே காணவில்லை –ஏனோ
நல்லவர் அக்கரைப் பூணவில்லை!
தேன்தேடி மலர்தனில் திரியும்வண்டே-பதவித்
தேன்தேடும் பித்தராம் ! திரியக்கண்டே!
ஏனில்லை மாற்றமே! நம்மிடையே – வருமா
எழுச்சியும் ஆற்றலும் நம்மிடையே!

புலவர் சா இராமாநுசம்

17 comments:

  1. நடைமுறையின் உண்மை நிலை ஐயா வரிகள் நன்று
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. //ஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும்
    ஒருசிலர் நோட்டினைத் தந்திடுவார்!//

    உண்மைதான் ஐயா. வாக்காளர்கள் விலை போவது நிற்கும் வரை இது நடந்துகொண்டுதான் இருக்கும். மாற்றம் வரும் என நம்புவோம்.

    ReplyDelete
  3. கேள்விக்கு பதில்தான் தெரியவில்லையே அய்யா !

    ReplyDelete
  4. உண்மையான வரிகற் ஐயா...
    அருமையா இருக்கு....

    ReplyDelete
  5. குழப்பங்கள் ஓய்ந்தமாதிரி தெரியவில்லையே ஐயா.

    ReplyDelete
  6. ஏனில்லை மாற்றமே! நம்மிடையே – வருமா
    எழுச்சியும் ஆற்றலும் நம்மிடையே!

    எழுசியும் ஆற்றலும் வரவேண்டுமையா
    நன்றி
    தம

    ReplyDelete
  7. சூழலுக்கு ஏற்ற கவிதை. ஆனால், குழப்பங்கள் ஓயவில்லை. கொள்கைகள் யாருக்கும் இல்லை.
    த ம மீண்டும் தகராறு பண்ணுகிறது.

    ReplyDelete
  8. யதார்த்தமான வரிகள் ஐயா...ஆனால் குழப்பங்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன!! யாருக்கும் கொள்கைகள் இல்லை. எல்லா கட்சிகளும் பிற கட்சிகளைச் சாடுவதில்தான் இருக்கின்றன...

    ReplyDelete
  9. கொள்கைகள் என்று ஏதாவது இருந்ததா என்ன. ?

    ReplyDelete
  10. அருமையான பா வரிகள்
    முடிவு
    வாக்காளர் கையில்
    பயன்மிக்க பதிவு

    ReplyDelete
  11. இன்றைய நிலையை அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள் ஐயா.

    கூட்டணிக் குழப்பங்கள் மறைந்து, இனி ஓட்டுப்பணிக்குப் பதிலாக கட்சிகளின் நோட்டுப் பணி தொடங்கிடுமே!!!

    ReplyDelete