Thursday, April 14, 2016

சித்திரைத் திருநாள் வாழ்த்து


இத்தரை மீதினில்
சித்திரைப் பெண்ணே
எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
என்னென்ன புதுமைகள் தந்தாய்

எண்ணிப் பதினொரு
இன்னுயிர் தோழியர்
நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
நடந்து வருவதும் என்னே

ஆண்டுக் கொருமுறை
மீண்டும் வருமுன்னை
வேண்டுவார் பற்பல நன்மை-அது
ஈண்டுள மக்களின் தன்மை

இல்லாமை நீங்கிட
ஏழ்மை மறந்திட
வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
கொல்லாமைத் தந்திடு வாயே

ஏரிக்குள மெல்லாம்
எங்கும் நிரம்பிட
வாரி வழங்கிடு வாயா-வான்
மாரி வழங்கிடு வாயா

புலவர் சா இராமாநுசம்
(மீள்பதிவு )

21 comments:

  1. சித்திரையை வரவேற்று அருமையான கவிதை.
    தங்களுக்கும் அடியேனின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் அய்யா!
    த ம 1

    ReplyDelete
  2. சித்திரைப் பெண்ணின் புகழ் பாடி
    புத்தாண்டிற்கு வாழ்த்து மடல் வாசிக்கும்
    மெத்தான உங்கள் பாடலை
    எத்தனை தரம் ஆனாலும் நான் பாடி மகிழ்வேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. அருமையான கவிதை வரிகள் ஐயா....
    தங்களுக்கும் தமிழ புத்தாண்டு வாழ்த்துகள் ....

    ReplyDelete
  4. இனிய சித்திரைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  5. அருமை ஐயா.

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சித்திரை மகளை வரவேற்போம் அருமை புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  8. சித்திரையை வரவேற்கிறோம், உங்களோடு இணைந்து.

    ReplyDelete
  9. சித்திரை மகள் இந்த வருடம் இன்னொரு நல்ல காரியமும் செய்யட்டும் ,தமிழகம் நல்லவர் கைகளில் செல்ல அருள் புரியட்டும் !

    ReplyDelete
  10. அருமை ஐயா! புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. சித்திரை மகள் நமக்கெல்லாம் நல்ல ஆட்சி ஒன்றை அமைத்துத் தருவாளா ஐயா

    கீதா

    ReplyDelete
  12. சிறப்பான புத்தாண்டு வரவேற்புக் கவிதை ஐயா

    ReplyDelete
  13. சிறப்பான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா
    தம+1

    ReplyDelete