Monday, April 11, 2016

முகநூல் பதிவுகள்!





உறவுகளே!
வயது என்பதைத் தண்டிய நான் பல தேர்தல்களை பார்த்து விட்டேன்! ஆனால் தற்போது நடக்க இருக்கின்ற தேர்தலைப்போல
மிகவும் கேவலமான நிலையினை இதுவரை கண்டதில்லை!இங்கு நாளும் நடை பெற்ற கூட்டணி கூத்துகளும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுக்கு, ஒன்று சளைத்தல்ல என்பது போல அலைந்த அவலமும்,
மக்கள் நலனில் யாருக்கும் அக்கறை இல்லை என்பதைக் காட்டுவதோடு சீட்டுப் பங்கீடும், அனைவருக்கும் பதவி ஆசை! என்பதை விட பதவிவெறியும்
  பிடித்து ஆட்டுகிறது என்பதே உண்மை!
எதிர்காலத் தமிழகம் என்ன ஆகுமோ !!!?




உறவுகளே ஓர் ஐயம்!
இதுவரை எல்லா அரசியல் கட்சிகளும் இலவசம் கொடுப்பது கூடாது அவ்வாறு கொடுப்பது மக்களைக் கெடுப்பது என்றும் இன்று
பேசுவது பெரும்பான்மை ஆகிவிட்டது! ஆனால் ஒவ்வொரு குடிசை வீட்டிற்கும் ஒரு மின் விளக்கே அனுமதித்துள்ள அரசு தொலைகாட்சி பெட்டி ,கிரைண்டர், மிக்ஸி என பலமின் இணைப்புகளை வைத்துக் கொள்ள அனுமதித்து எப்படி ( மீட்டர் ) இல்லாமல் என்று யாரும் கேட்க வில்லையே !என்பதுதான் என்னுடைய ஐயம்! யாரும் அப்படி கேட்கமாட்டார்கள்! அப்டிக் கேட்கும் கட்சிக்கு குடிசை வாசிகளின் ஓட்டு வருமா!!!?


நினைக்கத் தனக்கு என்பார்கள்! அதன் பொருள் என்ன! ஒருவன் தன் உள்ளத்தில், அடுத்தவன் கெட வேண்டுமென நினைத்தால் அது அவனுக்கே வந்து சேரும்! அடுத்தவனும் வாழட்டும் என்று நினைத்தால் இவ்வனும் வாழ்வான்! என்பதாம்! இதையேதான் வள்ளுவரும் , உள்ளுவ(து) எல்லாம் உயர்வுள்ளல் என்றார்

உறவுகளே!
வணக்கம்!
அனைவரும் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையே! அதற்காக நாம் பெரிதாகச் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்! முதலில் நாம் அனைவரையும் மதித்து நடந்தாலே போதும் !பிறகு , பாருங்கள்!பிறர் நம்மை மதிப்பது
உங்களுக்கே தெரியும்!

புலவர்  சா  இராமாநுசம்

16 comments :

  1. சரியாகச் சொன்னீர்கள்
    இன்னும் விரிவான மனம் திறந்த
    பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. சரியான கேள்விதான் ஐயா என்ன ஐயா முகநூலில் இறங்கி விட்டீர்களோ..?
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. சரிதாங்க அய்யா..

    ReplyDelete
  4. சரியான கேள்விதான் ஐயா....
    விரைவில் தமிழகம் சுடுகாடு
    ஆகிடுமே என்றுதான் ஐயம்...

    ReplyDelete
  5. சரியாகச்சொன்னீர்கள் ஐயா
    தம+1

    ReplyDelete
  6. இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் நீங்கள் கேட்ட கேள்வி நியாயமே!
    த ம 4

    ReplyDelete
  7. கேள்விக் குறி ,வியப்புக் குறியாய் மாறும் என்று நம்புவோம் :)

    ReplyDelete
  8. உங்களின் கருத்துகள் இயற்கை நிலையை அப்படியே உணர்த்துகிறது.

    ReplyDelete
  9. குழப்பமான நிலைதான் ஐயா..நீங்கள் சொல்வது சரிதான்

    ReplyDelete
  10. சிந்திக்க வைக்கும் கருத்துகள் ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...