கொள்கைகளை விற்றுவிட்டு கூட்டணியாம் இங்கே –அந்தோ
கூறுபோட்டு சீட்டுகளை பிரிக்கின்றார் பங்கே
எள்முனையும் மக்களுக்குச் சேவைசெய்யஅன் றாம் –கட்சிகள்
எண்ணுவது ! தேவையது ! பதவிசுகம் ஒன்றாம்!
உள்மனதில் ஓடுவது, இதுவென்றே அறிவீர் –மக்கள்
ஒன்றுபட்டு, தரமறிந்து வாக்குகளைத் தருவீர்!
முள்முனையில் கால்வைத்தால் என்னநிலை ஆகும்-என்றே
முன்கூட்டி சிந்தித்தால் துன்பமதும் போகும்!
புலவர் சா இராமாநுசம்
அரசில் பங்கு பெறுவதே கொள்கையது தெரியீரோ
ReplyDeleteஇந்த தேர்தலிலாவது மக்கள் விழிப்புணர்வு பெறட்டும் நம்புவோம் ஐயா
ReplyDeleteஎரியுற கொள்ளியில் எது நல்ல கொள்ளி?தெரியாமல் இருதலைக் கொள்ளியாய் தவிக்கிறேன் :)
ReplyDeleteதேர்தலே வேடிக்கை, பொழுது போக்காகி விட்டது!
ReplyDeleteமக்களை ஏமாளியாய் நினைக்கிறார்கள் ஐயா .சிந்தித்து ஒட்டு போட வேண்டும் .சிந்தித்தால் ஒட்டு போட செல்வோமா என்பது ஐயமே
ReplyDeleteதேர்தல் வேடிக்கை... நல்லா பொழுது போகுது...
ReplyDeleteமாற்றம் எல்லாம்
ReplyDeleteமக்கள் கையில் தான்!
இதுதானய்யா அரசியல்.
ReplyDeleteஇதுதானே அரசியல்
ReplyDeleteஒட்டு போடுவதற்கே வெறுப்பாக உள்ளது.
ReplyDeleteஒட்டு போடுவதற்கே வெறுப்பாக உள்ளது.
ReplyDelete