ஏறுவதும் இறங்குவதும் கண்ணா மூச்சே-இங்கே
எண்ணைவிலை ஆயிற்றே! பழகிப் போச்சே-ஆனால்
மாறாது விலைவாசி ஏறல் ஒன்றும் – வாழும்
மக்களுக்கே மாறாத துன்பம் என்றும்-பதில்
கூறுவதும் இல்லையாம் ஆள்வோர் தானே -மனம்
குமுறுவது நடுத்தர, ஏழைகள் முற்றும் வீணே!-ஒருநாள்
ஆறாது அன்னவரும் வெகுண்டு எழுவர்-தடுக்கும்
ஆற்றலின்றி அரசுகளும் கவிழ்ந்து விழுவர்!
புலவர் சா இராமாநுசம்
உண்மை ஐயா ஒருநாள் நடக்கும்
ReplyDeleteதமிழ் மணம் 1
மக்களுக்கு இது பழகி விட்டது.
ReplyDeleteநல்ல கவிதை ஐயா...
ReplyDeleteஇங்க எண்ணை விலை 30 டாலருக்கு கீழதான் இருக்கு... ஆனா நம்மூருல ஏத்திக்கிட்டே போறானுங்க... உலகமே குறைக்கும் போது நம்மூருல மட்டும் ஏறுது... மக்களும் பழகிட்டாங்க... எதுத்துக் கேக்குறதுலாம் இல்லை...
ஓருநாள் கண்டிப்பாக நடக்கும் ஐயா...
உலக மார்க்கெட்டில் விலை ஏறும்போதெல்லாம் விலையை ஏற்றினார்கள் ,ஆனால்,விலை குறையும் போது குறைக்க மறுப்பது எந்த வகையில் நியாயம் ?இதுதான் மக்களுக்கு சேவை செய்யும் லட்சணமா ?
ReplyDeleteவரும் தேர்தலில் bjp தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்பது உறுதி !
அந்த நல்ல நாளை எதிர்பார்க்கிறோம் ஐயா.
ReplyDeleteஅருமை அய்யா......
ReplyDeleteநிச்சயம் ஒரு நாள் நடக்கும் ஐயா
ReplyDeleteநன்றி
தம+1
This comment has been removed by the author.
ReplyDeleteஐயா தங்களோடு நானும் ஒருநாள் நடக்குமென்ற எதிர்பார்ப்புகளில் சிக்கியவளாய்..
ReplyDeleteபுலவர் வாக்கு பொய்க்காது என்பர். மக்களின் நலன் காக்காத ஆட்சியாளர்கள் நிச்சயம் பதவியை விட்டு இறங்குவர். நல்லதே நடக்கும் என நம்புவோம் ஐயா!
ReplyDeleteவிரைவில் நடக்கும் ஐயா இது
ReplyDelete