திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
எண்ணா செயல்தரும் துயரன்றோ
மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நாமும்
குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுயமாய்,
சிந்தனை தன்னில் ஆழ்வோமே
புலவர் சா இராமாநுசம்
அருமை.
ReplyDeleteஅருமை புலவர் ஐயா...நல்ல கருத்தான வரிகள்!
ReplyDeleteஅருமையான கருத்துகள் ஐயா...
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteத.ம. + 1
அருமை ஐயா சிறப்பான வரிகள்....
ReplyDeleteஅருமையான கவிதை வரிகள்.
ReplyDeleteத ம 3