Tuesday, March 15, 2016

மாதர்களே அணியாக திரளுங்கள் இன்றே-சாதி மதவெறியும் ஒழியட்டும்! போராட நன்றே!


காதலித்தார்! மணந்தாரே காலம் ஓடி- மாதம்
கடந்தய்யா எட்டுயென ! அதனபின் தேடி!
சாதலைத்தான் தந்ததய்யா சாதி வெறியே-வெட்டி
சாய்த்தாரே! ஐயகோ! இதுவா நெறியே!
வேதனைதான் என்றுமிது அழியா நோயா-பலர்
விழிகாண கொன்றாரே மனிதரிலே பேயா?
மாதர்களே அணியாக திரளுங்கள் இன்றே-சாதி
மதவெறியும் ஒழியட்டும்! போராட நன்றே!


புலவர் சா இராமாநுசம்

8 comments:

  1. நல்ல வரிகள் ஐயா. ஆனால் திரள்வார்களா என்பதுதான் ..நம் அரசியலும் மத சாதியோடு இணைந்துதானே அரசியல் மட்டுமல்ல பல சங்கங்களும் இவற்றோடுதானே இயங்குகின்றன...நம்புவோம்.

    ReplyDelete
  2. மிகுந்த மன உளைச்சலை உங்கள் கவிதையால் கலைத்தீர்கள் ஐயா!

    ReplyDelete
  3. அருமையான வரிகள் ஐயா....!!
    சாதி வெறியும் மத வெறியும்
    ஒழிக்க வேண்டாம்
    அழிக்க வேண்டும் ஐயா....!!!

    ReplyDelete
  4. வேதனையைப் பகிர்ந்த வரிகள்.

    ReplyDelete
  5. இன்றைய உண்மை நிலை ஐயா....
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  6. உங்கள் உணர்வு வெல்லட்டும்.

    ReplyDelete
  7. ஆண்களால் முடியவில்லை ,மாதர்களை திரளச் சொல்வது நியாயமே !

    ReplyDelete