காதலித்தார்! மணந்தாரே காலம் ஓடி- மாதம்
கடந்தய்யா எட்டுயென ! அதனபின் தேடி!
சாதலைத்தான் தந்ததய்யா சாதி வெறியே-வெட்டி
சாய்த்தாரே! ஐயகோ! இதுவா நெறியே!
வேதனைதான் என்றுமிது அழியா நோயா-பலர்
விழிகாண கொன்றாரே மனிதரிலே பேயா?
மாதர்களே அணியாக திரளுங்கள் இன்றே-சாதி
மதவெறியும் ஒழியட்டும்! போராட நன்றே!
புலவர் சா இராமாநுசம்
நல்ல வரிகள் ஐயா. ஆனால் திரள்வார்களா என்பதுதான் ..நம் அரசியலும் மத சாதியோடு இணைந்துதானே அரசியல் மட்டுமல்ல பல சங்கங்களும் இவற்றோடுதானே இயங்குகின்றன...நம்புவோம்.
ReplyDeleteமிகுந்த மன உளைச்சலை உங்கள் கவிதையால் கலைத்தீர்கள் ஐயா!
ReplyDeleteஅருமையான வரிகள் ஐயா....!!
ReplyDeleteசாதி வெறியும் மத வெறியும்
ஒழிக்க வேண்டாம்
அழிக்க வேண்டும் ஐயா....!!!
அருமை ஐயா...
ReplyDeleteவேதனையைப் பகிர்ந்த வரிகள்.
ReplyDeleteஇன்றைய உண்மை நிலை ஐயா....
ReplyDeleteதமிழ் மணம் 2
உங்கள் உணர்வு வெல்லட்டும்.
ReplyDeleteஆண்களால் முடியவில்லை ,மாதர்களை திரளச் சொல்வது நியாயமே !
ReplyDelete