Saturday, March 12, 2016

வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல விலைதன்னில் வாங்கிடவே பதவித்துண்டும்!



வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல
விலைதன்னில் வாங்கிடவே பதவித்துண்டும்
காணாத காட்சியா நாமும்முன்னால்-வீண்
கதையல்ல காண்போமே இதனைப்பின்னால்
நாணாத உள்ளத்தை வளர்த்துவிட்டோம்-எது
நடந்தாலும் நமக்கென்ன என்றேகெட்டோம்
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
தூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே


புலவர் சா இராமாநுசம்

10 comments:

  1. தேர்ந்தெடுக்க வேறு முறை ஒன்று தேட வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்தே எமதும்
      தமிழ் மணம் 3

      Delete
  2. நல்லோர்கள் ஆட்சிக்கு வருவதில்லை
    வந்தாலும் அவர்கள் கெட்டோரினால்
    கெட்ட் போகின்றார்களே நட்பரே...


    அருமையான கவிதை
    தொடருங்கள் நட்பரே....

    ReplyDelete
  3. எங்கள் உள்ளத்துணர்வை
    அப்படியே பிரதிபலிக்கும்
    அற்புதக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல கவிதை. யார் வந்தாலும் கொள்ளை அடிக்கத் தான் போகிறார்கள்.....

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    யார்வந்தாலும் நடப்பதுதான் நடக்கும் நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. ஐயா அருமையான கவிதை. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை நடக்கப் போகிறதுதான். கொள்ளையர்களில் யார் கொஞ்சம் குறைவாகக் கொள்ளையடிப்பவர்கள் என்று பார்ப்பது எவ்வளவு வேதனையான விஷயம் இல்லையா ஐயா.

    கீதா

    ReplyDelete
  7. அருமை ஐயா
    தேர்தல் பிரச்சாரத்தினை அரசே ஏற்று நடத்திடவேண்டும் ஐயா
    அப்பொழுதுதானஇந்நிலை மாறும்
    நன்றி ஐயா
    தம=1

    ReplyDelete