வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல
விலைதன்னில் வாங்கிடவே பதவித்துண்டும்
காணாத காட்சியா நாமும்முன்னால்-வீண்
கதையல்ல காண்போமே இதனைப்பின்னால்
நாணாத உள்ளத்தை வளர்த்துவிட்டோம்-எது
நடந்தாலும் நமக்கென்ன என்றேகெட்டோம்
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
தூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே
புலவர் சா இராமாநுசம்
தேர்ந்தெடுக்க வேறு முறை ஒன்று தேட வேண்டும்!
ReplyDeleteநண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்தே எமதும்
Deleteதமிழ் மணம் 3
அருமையான கவிதை
ReplyDeleteஐயா!
நல்லோர்கள் ஆட்சிக்கு வருவதில்லை
ReplyDeleteவந்தாலும் அவர்கள் கெட்டோரினால்
கெட்ட் போகின்றார்களே நட்பரே...
அருமையான கவிதை
தொடருங்கள் நட்பரே....
எங்கள் உள்ளத்துணர்வை
ReplyDeleteஅப்படியே பிரதிபலிக்கும்
அற்புதக் கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நல்ல கவிதை. யார் வந்தாலும் கொள்ளை அடிக்கத் தான் போகிறார்கள்.....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
யார்வந்தாலும் நடப்பதுதான் நடக்கும் நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான கவிதை ஐயா...
ReplyDeleteஐயா அருமையான கவிதை. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை நடக்கப் போகிறதுதான். கொள்ளையர்களில் யார் கொஞ்சம் குறைவாகக் கொள்ளையடிப்பவர்கள் என்று பார்ப்பது எவ்வளவு வேதனையான விஷயம் இல்லையா ஐயா.
ReplyDeleteகீதா
அருமை ஐயா
ReplyDeleteதேர்தல் பிரச்சாரத்தினை அரசே ஏற்று நடத்திடவேண்டும் ஐயா
அப்பொழுதுதானஇந்நிலை மாறும்
நன்றி ஐயா
தம=1